பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருடன் - முழுத் திருடன் கதை, மதனகாமராசன் கதை, சதாரம் கதை போன்ற கதைகளை அவர் சுவையாக விவரிப்பது வழக்கம் அப்பாவின் சேவகர்களில் பாலகிருஷ்ண நாயுடு என்று ஒருவர் இருந்தார். அவர் எங்களிடம் பிரியமாகப் பழகினார். அவரும் கதைகள் சொன்னார். அவர் சொல்லிய கதைகள் வேறு ரகமானவை. புராணங் களை ஆதாரமாகக் கொண்ட கதைகள், கடவுள்கள் அவர்களது லீலைகள் பற்றிய கதைகளாக இருந்தன. அவை, பொதுவாக, சமூகத்தில் கதை சொல்லிகள் மிகுதியாகவே இருந்தார்கள். தங்கள் அனுபவங்களையும், மற்றவர்களது அனுபவங் களையும், கண்டது கேட்டது அனைத்தையும், கற்பனை மெருகோடு கலந்து பேசிப் பொழுதுபோக்குவது அவர்களது இயல்பாக இருந்தது. கதைகள் எழுதுகிறவர்கள் அதிகம் தோன்றியிராத காலம் அது. பொழுதுபோக்குவற்கு என்றும், சுவாரசியமான நிகழ்ச்சிகளையும் செய்திகளையும் வம்புகளையும் சேகரித்துத் தருவதற்கென்றும் பத்திரிகைகள் வளர்ந்து பரவாத காலம் சினிமாக்கள் இல்லாத காலம் அது கதை சொல்லிகளின் காலமாக இருந்தது. எங்கள் வீட்டுக்கு இடைக்காலத்தில் சமையல்காரன் ஒருவன் வந்திருந்தான். திருநெல்வேலிக்காரன். அம்மா, அவளது அண்ணாச்சி சொந்த ஊரான தெற்குக் கார்சேரியில் நோய் கண்டு சிரமப்படுகிறார் என்று கேள்விப்பட்டு, அவரைப் பார்க்கவும் உடனிருந்து உதவவும் அங்கே போயிருந்தாள். எனவே, வீட்டில் ஒரு சமையல் காரனை நியமிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அவன் இளைஞன் தான். இருபத்தைந்து இருபத்தாறு வயதிருக்கலாம். திருநெல்வேலியில் சைவாள் ஒட்டல்களில் வேலை செய்தும், சில தனியார் வீட்டில் பணிபுரிந்தும் அனுபவப்பட்டவன்; நன்றாக சமைப்பான்; நம்பகமானவன் என்று அப்பாவின் உறவினர் ஒருவர் அவனை கொண்டு வந்து சேர்த்திருந்தார். அவனும் பணிவாக நடந்து கொண்டான். திறமையாக சமையல் வேலைகளை கவனித்து வந்தான். ஆள் பார்ப்பதற்கு நாடக நடிகன் மாதிரி இருந்தான். தலை முடியை - கிராப் தான்-வகிடு எடுத்து வாரிக்கொள்ளாது, மேல்நோக்கி ஸ்டைலாக சீவியிருப்பான். அலைபடிந்த கேசம் பேச்சில் அதிகமாக அளந்து தள்ளுவான். கதைவிடுதல் என்பார்களே, அந்த மாதிரி. அப்பா இல்லாத வேளைகளில், எங்களிடமும் அங்கு இருக்கக் கூடிய நிலைபெற்ற நினைவுகள் : 87