பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேவகரிடமும் அவன் அப்படிப் பேசுவது வழக்கம் தன் வாழ்க்கையில் அப்படி நிகழ்ந்தது. ஒரு முதலாளி வீட்டில் வேலை பார்த்த போது முதலாளி மகள் தன்மீது ஆசைப்பட்டது. ஊரில் ஒரு விதவைப் பெண் தன்னோடு ஓடி வரத் தயாராக இருந்தது போன்ற விவரிப்புகள். எல்லாம் கத்த அளப்புதான் என்று சேவகர் ஒரு முறை சொன்னார். ஏன்? சமையல்காரன் என்றால் இளப்பமா? இப்படி எல்லாம் நடக்காது-நடக்கமுடியாது என்கிறீர்களா? ராசா மகளே ஒரு சமையல் காரனை கல்யாணம் பண்ணிக் கொள்ள நேர்ந்த கதை உங்களுக்குத் தெரியுமா என்று கேட்டு, அவன் அந்தக் கதையை ரசமாகச் சொன்னான். ஒரு ராசாவின் அரண்மனையில் ஒருவன் சமையல்காரனாக வேலை பார்த்து வந்தான். ராசா, ராணி அவர்களுடைய ஒரே மகள். மூன்று பேர் தான் ராசா மகள் எப்பவும் அடுப்படியை சுத்திச் சுத்தி வருவாள். அவனிடம் பேசிக் கொண்டிருப்பதில் அவளுக்கு ஒரு சந்தோஷம் ஒருநாள் அவன் குளிப்பதற்காக குளத்துக்குப் போனான். அவன் திரும்பி வருவதற்கு ரொம்ப நேரம் ஆகியது. அவன் வந்ததும், ஏன் இவ்வளவு நேரம் என்று ராசா மகள் கேட்டாள். குளத்தங்கரை மண்டபத்திலே ஒரு முனிவர் இருந்தார். அவருக்கு முன்னாலேயும் சுத்திவரவும் பச்சிலைகள் மாதிரி இலைகள் குவியல் குவியலாகக் கிடந்தன. அவற்றில் இருந்து அவர் ஒரு ஒழுங்கு முறையில்லாமல், ஏதேதோ இலையை எடுத்து இரண்டு இரண்டாகச் சேர்த்து கட்டிப் போட்டபடி இருந்தார். எனக்கு அது வேடிக்கையாகப் பட்டது. அதையே பார்த்துக்கிட்டு நின்றதிலே நேரமானதே தெரியலே என்று சொன்னான். ஆச்சர்யமா இருக்குதே! அவரு ஏன் அப்படி ரெண்டு ரெண்டு இலையா சேர்த்துக் கட்டிப் போட்டுக்கிட்டு இருந்தாரு அவரு ஏன் அப்படிச் செய்றாருன்னு நீகேக்கலியா என்று ராசாமகள் விசாரித்தாள். கேட்காமல் இருப்பேனா? கேட்டேன். நான் விதிதேவதை ஊரிலே உலகத்திலே, மனிசங்களிலே ஆணுக பொண்ணுகளிலே யாருக்கும் யாருக்கும் கலியாணம் நடக்கணுமின்னு முடிச்சு போட்டு வைக்கிறேன். இதுபடி தான் நடக்கும் என்று அவரு சொன்னாரு என்று சமையல் காரன் பதில் அளித்தான். அவரு பொருத்தம் பாராமல் எப்படி எப்படியோ, கைக்கு வந்தபடி அவரு மனம் போன போக்கிலே ஜோடி ஜோடியா சேர்த்துக் கட்டிவைக்காரு அதனாலே தான் மனிசங்க 88 : வல்லிக்கண்ணன்