பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமையல்காரன்தான். அதிர்ஷ்டவசத்தாலே அவன் ஒரு தேசத்துக்கு ராசா ஆகிவிட்டான். அவன் நல்ல முறையில் அரசாண்டு பெயர் பெற்றான். அவனது கீர்த்தி பல நாடுகளுக்கும் பரவியது. சில வருடங்கள் ஒடிவிட்டன. அவன் முன்பு பணிபுரிந்த தேசத்தின் ராசா அவனுக்கு தன் மகளை மணம் புரிந்து கொடுக்க விரும்பி முயற்சி செய்தார். அவனுக்கும் பழைய ராசாமகளுக்கும் முறைப்படி கல்யாணம் நடந்தது. ராசா ஆகியிருந்த அவன் ஆளே மாறியிருந்தான். ராசாமகள் அவனை அடையாளம் கண்டுகொள்ளவேயில்லை. இருவரும் சந்தோஷமாக வாழ்ந்தார்கள். ஒருநாள் அந்த ராசாமகள் கணவனுக்கு தலையில் எண்ணெய் தேய்த்தாள். தலையில் ஆழமான வெட்டுக்காயத்தின் தழும்பை அவள் காண நேரிட்டது. அன்பாக அதை வருடியபடி இது எந்தப் போரிலே பட்ட காயம் என்று கொஞ்சலாக விசாரித்தாள். அவன் புன்முறுவல் பூத்தபடி, அது எந்தப் போரிலும் பட்ட காயமில்லை பெண்ணெ ஒரு சமயம் நீ கோபப்பட்டு வெண்கல அகப்பையினாலே என் தலைமீது ஓங்கி அடித்தாயே, அப்போபட்ட காயத்தின் தழும்புதான் அது என்றான். ராசாமகள் வெட்கித் தலைகுனிந்தாள். அவன் மென்மையாகச் சொன்னான்: விதி வலியது பெண்ணே! முனிவர் வாக்கு பலித்து விட்டது. இந்தக் கதையை சுவாரசியமாகக் கூறிய எங்கள்வீட்டு சமையல் காரன் சொன்னான். அது தான், யாருக்கு என்ன நடக்கும் என்று எவருக்கும் தெரியாது. ஒருவர் வாழ்க்கையில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். எனக்கும் ஒருநாள் அதிர்ஷ்டம் வந்து, எதிர்பாராத வகையிலே நான் பெரும் பணக்காரனாகி விடலாம். இப்ப சமையல் காரனாக இருக்கிறேன். அவ்வளவுதான் என்றான். பெரும்பாலான மனிதர்களைப் போலவே அவனும் அதிர்ஷ்டத்தில் நம்பிக்கை வைத்து, ஆசைக்கனவுகளை வளர்த்து வந்தான். அவன் எத்தன், ஏமாற்றுக்காரன், திருநெல்வேலியில் மோசடிகள் செய்தவன் என்று அப்பாவுக்கு நம்பகமான ஒரு நபர் மூலம் தெரியவந்தது. அதனால் அப்பா, ஒருநாள், அவன் கணக்கைத் தீர்த்து அவனை வேலையிலிருந்து நீக்கி விட்டார். 90 : வல்லிக்கண்ணன்