பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதற்காக அவன் வருத்தப்படவில்லை. எல்லோரிடமும் சொல்லி க்கொண்டு பெருங்குளம் ஊரைவிட்டு வெளியேறினான். அப்புறம் அவன் என்ன ஆனானோ, தெரியாது. பெருங்குளத்தில் வசித்த காலத்தில், சாவு பற்றி தெரிந்து கொள்ளும்படியான சந்தர்ப்பங்கள் தொடர்ந்து வாய்த்தன. அவை அம்மாவின் உறவினர்கள் மூலமே கிட்டின. அம்மாவின் ஊரான தெற்குக் கார்சேரியில், அவளது பிறந்த வீடான கிணற்றங்கரைப் பிள்ளை குடும்பத்தில் சாவு தொடர்ந்து வந்தது. அம்மா குடும்பத்தினர் மூன்று வீடுகளைச் சேர்ந்தவர்கள். பெரிய வீடு, நடு வீடு, சின்ன வீடு எனப் பெயர் பெற்றிருந்த மூன்று வீடுகளும் ஒரே வரிசையில் சேர்ந்தே இருந்தன. அம்மா பெரிய வீட்டின் மூத்த மகள். அவளுக்கு அண்ணாச்சி ஒருவர் இருந்தார். அந்த ஊரின் கிராம முனிசீப் அவர். நடுவிட்டு மாமா போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்ன வீட்டு மாமா வல்லக்குளம் கிராமமுனிசீப், ராஜவல்லிபுரத்தில் வசித்த எங்கள் இரண்டாவது பெரியப்பாவின் மகளான அகிலாண்டம் அவருக்கு வாழ்க்கைப் பட்டிருந்தாள். அவர்களுக்குக் குழந்தை பிறக்கவில்லை. சின்ன வீட்டுத் தாத்தா, வயது அதிகமானவர், சாகக் கிடந்தார். அம்மாவும் நாங்களும் கார்சேரி போயிருந்தோம். தாத்தா நல்ல உயரம் காதுகளில் சிவப்புக்கல் கடுக்கன் அணிந் திருந்தார். மரணப்படுக்கையில் கிடந்த அவரிடம் உறவுக்காரர்கள் ஏதாவது கேட்டு தொந்தரவு செய்து கொண்டிருந்தார்கள். அவருடைய காதுக் கடுக்கன்களை கொடுக்கும்படி பிள்ளைகளை கேட்கும்படி செய்தார்கள். பேரன் என்ற முறையில், கடுக்கன்களைக் கேட்கும்படி என் அண்ணனையும் தூண்டினார்கள். அப்படி கேட்கப்பட்ட போது, தாத்தா பதட்டமடைவார். தன் கைகளால் காதுக் கடுக்கன்களைப் பற்றிக் கொண்டு, தரமாட்டேன் - தரமாட்டேன் என்று முனங்குவார். பாருங்களேன், சாகிற சமயத்திலும் பொருளாசை அவரை விடவில்லையே என்று பெரியவர்கள் சொல்வார்கள். சாகக் கிடக்கிற மனிதனை இப்படி தொல்லைப்படுத்துவது சரியல்ல என்று யாரும் எண்ணவில்லை. ஒருநாள் அவர் இறந்து போனார். எல்லோரும்துக்கம் கொண்டாடி நிலைபெற்ற நினைவுகள் கீ 91