பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

னார்கள் பெண்கள் அழுது ஒப்பாரி வைத்துப் புலம்பினார்கள். நடுவில் எங்கள் அக்கா - இறந்துவிட்டவரின் மருமகள் - அண்ணனையும் என்னையும் அடுப்படிக்கு அழைத்துச் சென்றாள். உடம்பை எடுத்துப் போக இன்னும் நேரமாகும் அதுவரை நீங்க பட்டினி கிடக்கமுடியாது என்று சொல்லி எங்களுக்கு காப்பி கொடுத்தாள். அவளும் குடித்தாள். அவள் ஐந்தாம் வகுப்பு வரை படித்திருந்தாள். தொடர்ந்து பக்தி நூல்களைப் படிக்கவும் தேவாரம் திருவாசகம் முதலியவற்றைப் பாடவும் பயிற்சி பெற்று தனது அறிவை வளர்த்துக் கொண்டாள். மாமனார். இறந்து போனதில் அவளுக்கு வருத்தம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. பிணத்தருகே பெண்கள் அமர்ந்து அழுது புலம்பி ஒலமிட்டுக் கொண்டிருந்தது அவளுக்குப் பிடிக்கவில்லை. இதெல்லாம் வேண்டாத வேலை ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவரோ மாநிலத்தீர் என்று முன்னோர்கள் சொல்லிவைத்திருக்காங்க என்ன தான் அழுது புலம்பினாலும் செத்தவங்க திரும்ப வரவா போறாங்க? இல்லையா தம்பி என்று அந்த அக்காள் என் அண்ணனிடம் சொன்னாள். அவள் இயல்பு வழக்கத்துக்கு மாறுபட்ட ஒன்றாகவே எனக்குப்பட்டது. சின்ன வீட்டுத் தாத்தா இறந்து சில மாதங்கள் ஆன பின்னர், பெரிய வீட்டு மாமா படுக்கையில் விழுந்தார். அதை ஒட்டித்தான் அம்மா கார்சேரி போய் தங்கியிருந்தாள். முடிவு சீக்கிரம் ஏற்படாது என்று தெரிந்ததாலும், சமையல்காரன் போய் விட்டான் என்று அப்பா சொல்லிவிட்டதாலும், அம்மா பெருங்குளம் வந்து சேர்ந்தாள். சில வாரங்களில் மாமாவின் சாவுச் செய்தி வந்தது. அம்மா, எங்கள் மூவரையும் கூட்டிக் கொண்டு, வில் வண்டிப் பயணம் செய்து, கார்சேரி அடைந்தாள். வழி நெடுக அழுது அரற்றிய படியே இருந்தாள். சாவு வீட்டில் நடைபெறும் சம்பிரதாயச் சடங்குகளை கவனிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மாமாவுக்கு ஒரே பிள்ளை. ஆண் குழந்தை மூன்று வயசிருக்கும் குழந்தைக்கும் எப்பவும் ஏதாவது வியாதி தான். தந்தைக்கு கொள்ளிவைப்பதற்காக அதை சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்றார்கள். மொட்டையடிக்கப் பட்டு, ஒயாது அழுதபடி காட்சி தந்த சிறு மகவு பரிதாபத்துக்குரியதாகவே பட்டது. 92 : வல்லிக்கண்ணன்