பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில வாரங்களிலேயே, அம்மா எதிர்பார்த்த கடிதமும் பணமும் அப்பாவிடமிருந்து வந்து சேர்ந்தன. உடனடியாக திருநெல்வேலி செல்வதற்கான ஆயத்தங்கள் செய்யப்பட்டன. எங்கள் பெரிய அண்ணன் கல்யாணசுந்தரம், திருநெல்வேலியில் அம்மாச்சி வீட்டில் தங்கிப் படித்துக் கொண்டிருந்தான். அண்ணனுக்கு தாய் மாமன் மூன்று பேர். அவர்களில் ஒருவர் வேறு ஊரில் ஏதோ தொழில் புரிந்து கொண்டிருந்தார். இன்னொருவர், மனைவியோடு, திருநெல்வேலியில் இருந்தார். அவரின் அம்மாவும் கல்யாணமாகாத தம்பியும் அவரோடுதான் வசித்தார்கள். சுப்பையா மாமா என்கிற அவர் நல்ல மனிதர். அன்பு உள்ளம் கொண்ட பரோபகாரி கல்யாணி அண்ணனோடு வெளியூரிலிருந்த பெரிய மாமாவின் பையன்கள் இரண்டுபேரும் அதே வீட்டில் தங்கி, பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார்கள். அந்த மாமா தான் நாங்கள் திருநெல்வேலி வருவதற்கும், பள்ளியில் சேர்வதற்கும் வேண்டிய உதவிகள் பலவும் செய்தார். அம்மாவின் தங்கை வீடும் திருநெல்வேலியில் இருந்தது. அவள் கணவர் காந்திமதிநாத பிள்ளை பெரும் செல்வந்தர். பல்லிக்கோட்டை என்ற ஊரில் அவருக்கு சொத்து அதிகம் இருந்தது. அவர் பல்லி க்கோட்டைப் பிள்ளை என்றே பெயர் பெற்றிருந்தார். பல்லிக்கோட்டை என்பது பரலிக் கோட்டை என்பதன் சிதைவாகும். அதை பரலி என்றும் சுருக்கமாகச் சொல்வர். பரலி சு. நெல்லையப்பர் எனும் புகழ்பெற்ற தேசபக்தரும், மகாகவி பாரதி யாருக்கு அவர் வாழ்நாளில் பேருதவிகள் செய்தவருமான எழுத்தாளர் - பத்திரிகாசிரியர் அந்த ஊர்க்காரர் தான். அவர் சென்னையில் வசித்தார். லோகோபகாரி என்கிற பத்திரிகையை நடத்தி வந்தார். அந் நாள்களில் மிகுந்த கவனிப்புக்கு உரிய இதழாக அது விளங்கியது. காந்திமதிநாத பிள்ளை சமூகப் பிரமுகர். சுகவாசி. அவருக்கு முதல் மனைவி மூலம் பிறந்த ஒரு மகள் இருந்தாள். வயதுக்குவந்த பெரியவள். மனைவி இறந்த பிறகு இரண்டாம் தாரமாக, எங்கள் அம்மாவின் தங்கை ஆவுடையம்மாளை ம்ணந்திருந்தார். அவள் நோயாளியாகவே வாழ்ந்தாள். அவளுக்கு ஆண் குழந்தைகள் பிறந்தன. ஆனால் பிறந்த ஒவ்வொரு குழந்தையும் நோஞ்சானாகவே நிலைபெற்ற நினைவுகள் : 97