பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறந்தது. கழுத்தில் ஏதோ கோளாறு காரணமாக தலை நேராகவே இராது. இரண்டு, இரண்டரை வயதானாலும் படுக்கையிலேயே தான் வாழ்ந்தது. சீக்கிரமே செத்தும் போயிற்று. அப்பா வந்து வேறு ஏற்பாடுகள் செய்கிற வரை, நாங்கள் சித்தப்பா வீட்டிலேயே வசிப்பது என்று முடிவாயிற்று. அது விசாலமான பெரிய வீடு. முன் வராந்தா கூட வெகு அகலமானது தான். படிவிட்டு இறங்கினால், சிமின்ட் பூசிய நீண்ட முற்றம் அதன் எதிரே பரப்பு மிகுந்த மண்தரை, ஒரு ஓரத்தில் நெல்லி மரங்களும் கறிவேப்பிலை மரங்களும் நின்றன. வீட்டின் பக்கத்திலேயே பெரிய வாய்க்கால் ஓடியது. சின்னம்மையும் சித்தப்பாவும் எங்களிடம் பாசமும் பிரியமும் கொண்டு அன்பு காட்டினார்கள். அக்காளும் பிரியமாக இருந்தாள். அந்த வீட்டில் சில மாத காலம் இனிது கழிந்தது. திருநெல்வேலி மந்திரமூர்த்தி உயர்நிலைப் பள்ளியில் நான்காம் வகுப்பில் நான் சேர்க்கப்பட்டேன். அண்ணன் ஆறாம் வகுப்பு. கல்யாணி அண்ணன் அதே பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். திருநெல்வேலி டவுன் ரயில் நிலையம் செல்கிற சாலையில் அமைந்திருந்தது அந்தப் பள்ளி எதிர்புறமும் சுற்றுப்புறங்களிலும் நெல்வயல்கள். வீட்டிலிருந்து சுமார் ஒரு மைல் தூரம் இருந்தது. நான்காம் வகுப்பு வாத்தியார் ராமசாமி பிள்ளை கல்வி கற்பிப்ப துடன், மாணவர்களுக்கு ஒழுக்கம், இலட்சியம் முதலியன பற்றி அறிவுறுத்துவதிலும் ஆர்வமாக இருந்தார். புத்தகத்தில் உள்ள பாடங்களைக் கற்றுக் கொடுப்பதோடு, நற்கருத்துக்களைக் கூறும் கதைகளை ரசமாகச் சொல்வதிலும் அவர் ஈடுபாடு கொண்டிருந்தார். தந்தையின் சொல்லை மீறாத குணம் உடைய மகனான கசபியான்கா கதை கப்பல் தலைவரான தந்தை ஒரு பயணத்தின் போது மகனையும் உடன் அழைத்துச் சென்றார். ஒருநாள், மகனை பாய்மரத்தின் அருகே நிற்க வைத்து, நீ இங்கேயே நில்லு நான் கப்பலை சுற்றிப் பார்த்து விட்டு வருவேன். நான் திரும்ப வருகிற வரை நீநகராமல் இதே இடத்தில் நிற்க வேண்டும் என்று சொல்லிச் சென்றார். சற்று நேரத்தில் எதிரிகளின் கப்பலிலிருந்து வீசப்பட்ட குண்டு தாக்கி, கப்பல் தீப்பற்றிக் கொண்டது. தலைமை மாலுமியும் இறந்து போனார். கப்பலில் இருந்தவர்கள் தப்பிச் செல்வதற்காக ஓடினார்கள். அந்தப் பையனையும் அழைத்தார்கள். 98 : வல்லிக்கண்ணன்