பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 நிலைபெற்ற நினைவுகள் ס", - * -۔--بی. .. g ب - معر s அவற்றை எழுத்தில் பதிவு செய்ய வேண்டும் என்ற ஆசையே என்னுள் கனன்று கொண்டிருந்தது. கதைப் பத்திரிகைகளைப் படித்தபோது, முக்கியமாக ‘மணிக்கொடி இதழ்களைப் படிக்கும் வாய்ப்பைப் பெற்றபோது நானும் இந்த விதமான கதைகளை எழுத வேண்டும், புதுமையான எழுத்துகளை ஆக்க வேண்டும் என்ற உந்துதல் என்னுள் சதா உறுத்திக் கொண்டே இருந்தது. என்னாலும் எழுத முடியும் என்ற நம்பிக்கையும் என்னுள் வளர்ந்து வந்தது. எழுதுவது ஒரு வரப்பிரசாதம் (Gif); எல்லோராலும் எழுதிவிட முடியாது என்றுதான் பலரும் சொல்லி வந்தார்கள். ‘மணிக்கொடி சிறுகதைப் பத்திரிகையில் சிறிது காலம் ஒரு விளம்பரம் வந்து கொண்டிருந்தது. அதில் எழுதுகிறவர்களின் ஆற்றலைக் குறிப்பிட்டது. அது புராதன சீனாவில் ஒரு வழக்கம் இருந்தது. பிறந்த குழந்தையைத் தரையில் படுக்க வைத்து அதைச் கற்றிலும் சகலவிதமான பொருள்களையும் பரப்பியிருப்பார்கள். அந்தக் குழந்தை தன் கையால் எதைத் தொடுகிறதோ, அது சம்பந்தப்பட்ட துறையில் ஈடுபட்டு பிற்காலத்தில் அக்குழந்தை பேரும் புகழும் பெறும் என்று பெரியவர்கள் நம்பினார்கள். அந்த ரீதியில் பார்த்தால், மணிக்கொடி”யில் எழுதுகிற அத்தனை பேரும் அவர்களது குழந்தைப் பருவத்தில் பேனாவைத் தான் தொட்டிருப்பார்கள். இப்படிச் சொன்னது அந்த விளம்பரம். 'கருவிலே திரு உடையார்கள்’ என்பார்களே அதுபோல, மணிக்கொடி எழுத்தாளர்கள் பிறவி எழுத்தாளர்கள் என்று பெருமைபட்டுக் கொண்டார் அதன் ஆசிரியர். நான் மணிக்கொடி எழுத்தாளர்கள் போல் புதுமையாகவும் சிறப்பாகவும் கதைகள் எழுத வேண்டும் என்று விரும்பி எழுதலானேன். நான் பிறவி எழுத்தாளன்' இல்லை என்பது எனக்குத் தெரியும். ஆனால் எவரும் எழுதி எழுதிப் பயின்றால் விரைவிலேயே தேர்ச்சி அடைய முடியும் என்று நான் நிச்சயமாக நம்பினேன். குன்றாத தன்னம்பிக்கை, குறையாத ஆர்வம், சலியாத உழைப்பு, தளராத ஊக்கம் இவை ஒருவனுடைய திறமையை வளர்த்து வெற்றிப்பாதையில் அவனை முன்நடத்திச் செல்லும் எனும் உறுதி எனக்கு இருந்தது. ஆகவே என் இஷ்டம் போல் எழுதினேன். கிடைத்த புத்தகங்கள் பத்திரிகைகளை எல்லாம் படித்தேன். அதிகமாக