பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 & நிலைபெற்ற நினைவுகள் எழுதியிருந்தார். சக்திதாசனிடம் சொல்லிவிட்டு நான் ஈரோடு போனேன். நாடகக் கலை மாநாடு வெகு சிறப்பாக நடைபெற்றது. பொருளாதார அறிஞர் ஆர்.கே. சண்முகம் செட்டியார் தலைமை வகித்தார். நாவலாசிரியர் ஆர். சண்முகசுந்தரமும் அவர் தம்பி ஆர். திருஞானசம்பந்தமும் தொடங்கி சிரமத்துடன் நடத்திவந்த 'வசந்தம்' எனும் இலக்கிய மாத இதழை நடத்தும் பொறுப்பை செட்டியார் ஏற்றுக் கொண்டிருந்தார். அவர் பெயர் கெளரவ ஆசிரியர்' என்று பத்திரிகையில் அச்சிடப்பட்டு வந்தது. சிலப்பதிகாரம் காவியத்துக்கு விரிவுரை- விளக்க உரை ஆர்.கே. சண்முகம் செட்டியார் பெயரில் இதழ்தோறும் வெளிவந்து கொண்டிருந்தது. உண்மையில் அதைத் தமிழ்ப் பண்டிதர் ஒருவர் எழுதி வந்தார் என்ற பேச்சும் பரவிவந்தது. மாநாட்டின் தலைமை உரையின்போது, அவர் 'வசந்தம்’ பத்திரிகை நடத்துவதையும், அதில் சிலப்பதிகாரம் விளக்க உரை எழுதுவதையும் பெருமையாகச் சொன்ன சண்முகம் செட்டியார், அந்த மாதத்திய 'வசந்தம்’ இதழையும் உயர்த்திப் பிடித்து அனைவருக்கும் காட்டி மகிழ்ந்தார். திராவிடக் கழகப் பேச்சாளர் சி.என். அண்ணாதுரை சிறப்புரை ஆற்றினார். 'சிரிப்பு நடிகர்’ என்.எஸ்.கிருஷ்ணன், நாடகங்கள் எழுதிப் பெயர் பெற்றிருந்த பேராசிரியர் சி.ஆர். மயிலேறு முதலியவர்கள் பேசினார்கள். தீர்மானங்கள் திறைவேற்றப்பட்டன. நாடகக் கலை வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு 'நாடகம் என்றொரு மாத இதழ் வெளியிட வேண்டும் என்பதும் ஒரு தீர்மானம். அது விஷயமாகப் பேசத்தான் டி.கே.சண்முகம் என்னை அழைத்திருந்தார். அந்தச் சந்தர்ப்பத்தில் முறையான பத்திரிகை புதிதாகத் தொடங்கி நடத்துவதற்கு அரசு அனுமதி கிடைக்காது. அதனால் 'குமரி மலர் மாதிரி மாதம் ஒரு புத்தகம்’ எனக் கொண்டு வரலாம். நிலைமை சீர்பட்டதும் அதையே பத்திரிகையாக மாற்றிக் கொள்ளலாம். டி.கே.எஸ். நாடக சபை தான் அந்த இதழின் பொறுப்பை ஏற்று நடத்தும். அதன் ஆசிரியப் பொறுப்பை நான் ஏற்றுச் செயல் புரிய வேண்டும் என்று சண்முகம் என்னைக் கேட்டுக் கொண்டார். நான் தயங்கினேன். நண்பர் சண்முகம் உற்சாகமூட்டினார். 'நாடகம்’ இதழுக்கு வளமான எதிர்காலம் இருக்கும் என்று நம்பிக்கை அளித்தார். சரி, வருகிறேன் என்று சொல்லி வைத்தேன்