பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் ; 113 அதே நாளில் டி.கே. சண்முகம் கடிதம் வந்தது. 'நாடகம் இதழுக்கான வேலைகள் மும்முரமாக நடைபெறுகின்றன. நாடகங்களுக்குத் திரை ஒவியங்கள் ("சீன்கள்') வரைகிற ஒவியர் மாதவனிடம் அட்டைக்கான சித்திரம் தீட்டும்படி சொல்லியிருக்கிறோம். நீங்கள் எப்போது ஈரோடு வருகிறீர்கள் என்று அவர் கேட்டிருந்தார். நான் யோசித்தேன். 'நாடகம் புதிதாக ஆரம்பித்து வளர்க்கப்பட வேண்டிய இதழ். அதில் நாடகம் மற்றும் கலைகள் பற்றிய விஷயங்களுக்கே முக்கியத்துவம் இருக்கும். டி.கே. சண்முகம் விருப்பம்போல்தான் கட்டுரைகள் எழுதிப் பத்திரிகை தயாரிக்க வேண்டியிருக்கும். நான் விரும்புகிற விதமெல்லாம் கதைகள் கட்டுரைகள் எழுதி வெளியிடுவதற்கான வாய்ப்பும் வசதியும் இரா. கிராம ஊழியன் ஏற்கனவே வந்து கொண்டிருக்கும் இலக்கியப் பத்திரிகை. மாதம் இருமுறை வருவது, வாசகர்கள் எழுத்தாளர்களிடையே நல்ல கவனிப்பையும் பெற்று வருகிறது. அதனால் நான் கிராம ஊழியனுக்குப் போவதே நல்லது என்று முடிவு செய்தேன். என் எண்ணத்தை டி.கே. சண்முகத்துக்கு எழுதித் தெரிவித்தேன். மறுவாரம் சென்னைக்கு வந்த சண்முகமும் டி.கே. பகவதியும் நவசக்தி அலுவலகம் வந்து என்னைச் சந்தித்தார்கள் நீங்கள் நாடகத்தைச் சாகடித்துவிட்டீர்கள். நாடகம் இதழைக் கருவிலேயே சிதைத்துவிட்ட பாபம் உங்களைச் சேரும் என்று சண்முகம் சிரித்துக் கொண்டே சொன்னார். 'உங்கள் துணையோடு நாடகம் இதழை சிறப்பாகக் கொண்டுவர முடியும் என்று எண்ணினோம். நீங்கள் வரவில்லை என்றதுமே எங்கள் நம்பிக்கை தளர்ந்து விட்டது. இப்போதைக்குப் பத்திரிகை ஆரம்பிக்க வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டோம் என்றும் அவர் கூறினார். 'உங்கள் எழுத்தார்வத்துக்கும் திறமைக்கும் இலக்கியப் பத்திரிகையில் சேர்ந்து உழைப்பது தான் நல்லது. கிராம ஊழியன் உங்களுக்கு ஏற்ற இடம் தான். உங்கள் எதிர்காலம் சிறப்பாக அமையட்டும் என்று வாழ்த்திவிட்டுச் சென்றார் சண்முகம். பிப்ரவரி கடைசி வாரத்தில், அ.வெ.ர.கி.ரெட்டியார் சென்னைக்கு வந்தார். அவரோடு ஊழியன் அச்சகத் தொழிலாள方 ஒருவரும் வந்திருந்தார். 'டவுனுக்குப் போய் அச்சு எழுத்துகளுக்கு ஆர்டர் கொடுக்க வேண்டும். பிளாக்குகள் செய்யும் கம்பெனிக்கும்