பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 & நிலைபெற்ற நினைவுகள் ஊழியனில் ந. பிச்சமூர்த்தி அடிக்கடி கவிதை எழுதிவந்தார். எப்பவாவது கதையும் எழுதினார். அந்நாள்களில் ந.பிச்சமூர்த்தியும் கு.ப.ராஜகோபாலனும் "மறுமலர்ச்சி இலக்கிய இரட்டையர்' என்று குறிப்பிடப்பட்டனர். இருவரும் ஒன்றாகக் கும்பகோணத்தில் அருகருகே வசித்ததும் ஒரு காரணம். இரண்டு பேரும் ‘மணிக்கொடி எழுத்தாளர்கள். புதுமையான சிறுகதைகளும், தமிழில் புதுமுயற்சியான வசனகவிதையும் எழுதுவதில் ஈடுபாடும் உற்சாகமும் கொண்டிருந்தார்கள். கால ஒட்டத்தில், பிச்சமூர்த்தி வாழ்க்கை நிர்ப்பந்தம் காரணமாக ஒரு உத்தியோகம் தேடிக்கொண்டு அவ் வேலை நிமித்தமாக வெளியூர் சென்று வெவ்வேறு ஊர்களில் வசிக்க நேரிட்டது கு.ப. ராஜகோபலன் குடும்பத்தோடு கும்பகோணத்திலேயே தங்கியிருந்தார். அங்கிருந்தே பத்திரிகைகளுக்கு எழுதிக் கொண்டிருந்தார். கஷ்ட ஜீவனம் தான். ஆயினும் இலக்கிய ஆர்வம் அவருக்கு உற்சாகம் அளித்து வந்தது. அவரைச் சுற்றி இலக்கிய ரசிகர்களும், இளைய எழுத்தாளர்களும் கூடியிருந்து அவரது பேச்சைக் கேட்டு மகிழ்ந்தனர். அப்படிப்பட்டவர்களின் எழுத்து முயற்சிகளை குபரா.ஏற்று கிராம ஊழியன் இதழில் வெளியிடுவதற்காக அனுப்பி வைத்தார். தி.ஜானகிராமன், கரிச்சான்குஞ்சு என்று பெயர் சூடிக்கொண்ட ஆர். நாராயணஸ்வாமி, கி.ரா.கோபாலன், எம்.வி.வெங்கடராம் முதலானோரின் எழுத்துக்கள் கு.ப.ரா.வாயிலாக ஊழியனுக்கு வந்து கொண்டிருந்தன. தி.ஜானகிராமன் அப்போதுதான் எழுதத் தொடங்கியிருந்தார். 'அமிர்தம் என்ற பெயரில் ஒரு நாவல் எழுதினார். அவருடைய முதல் நாவல் அது கிராம ஊழியனில் தொடர்கதையாகப் பிரசுரம் பெற்றது. தி.ஜா.ஒரு பள்ளிக்கூடத்தில் ஆசிரியராகப் பணிபுரிந்து கொண்டிருந்தார். நாராயணஸ்வாமியும் பள்ளி ஆசிரியர் தான். அவரும் அப்போது தான் எழுத்து முயற்சியில் ஈடுபட்டிருந்தார். அவர் குயராவைத் தன் குருவாக வரித்துக் கொண்டார். குயராகரிச்சான் என்ற புனைபெயர் வைத்திருந்தார். அவருடைய சீடர் எனும் முறையில் நாராயணஸ்வாமி தனக்கு கரிச்சான்குஞ்சு என்ற பெயரை வைத்துக் கொண்டார்.