பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் & 121 எம்.வி. வெங்கட்ராம் மாணவப் பருவத்திலேயே எழுதத் தொடங்கியிருந்தார். அவருடைய சிறுகதைகள் ஏற்கனவே ‘மணிக்கொடி”யில் தொடர்ந்து வெளிவந்து அவர் பெயரைக் கவனிப்புக்கு உரியதாக்கியிருந்தன. படிப்பை முடித்ததும், அவர் பம்பாய் நகரம் சேர்ந்து ஜரிகை வியாபாரத்தில் ஈடுபட்டார். அவர் செளராஷ்டிர இனத்தைச் சேர்ந்தவர். தொழிலை வெற்றிகரமாக நடத்தினார். பலவிதமான அனுபவங்களும் பெற்றார். பல வருடங்களுக்குப் பிறகு அவர் கும்பகோணத்துக்குத் திரும்பினார். பத்திரிகைகளுக்குக் கதைகள் எழுதலானார். அவருடைய சிறு கதைகள் ‘கலாமோகினி’ இதழில் தொடர்ந்து வந்தன. கு.ப.ரா. அவரிடமிருந்து கதைகள் பெற்று கிராம ஊழியனுக்கு அனுப்பி வந்தார். - கும்பகோணம் ஓவியக் கல்லூரியில் பயின்று கொண்டிருந்த கோபுலு, ஸாரதி போன்ற இளம் ஒவியர்களுக்கும் கு.ப.ரா. ஊக்கம் அளித்தார். கதைகளும் சித்திரங்கள் தீட்டச் செய்து, அவற்றையும் ஊழியனில் பிரசுரிப்பதற்காக அனுப்பிக் கொண்டிருந்தார். பிப்ரவரி இறுதியில் நான் துறையூர் சேர்ந்த பின்னர், மார்ச் மாதம் நடுவில் கு.ப.ரா. துறையூருக்கு வந்தார். அவருக்கு பணத்தேவை ஏற்பட்டிருந்தது. ஊழியன் நிர்வாகத்திடமிருந்து சிறு தொகை கேட்டுப்பெறும் எண்ணத்தோடு அவர் வந்தார். பணம் நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு அவர் வந்திருந்தார். ஆனால் அவர் எண்ணம் நிறைவேறவில்லை. அவருக்குப் பணம் தர இசையவில்லை சம்பந்தப்பட்டவர்கள். அது அவருக்கு மிகுந்த ஏமாற்றம் தந்தது. அவர் மனச்சோர்வுடன் திரும்பிப் போனார். அதற்குப் பிறகு கு.ப.ரா. துறையூருக்கோ திருச்சிக்கோ வரவில்லை. அந்தச் சந்தர்ப்பத்தில்தான் நான் கு.ப. ராஜகோபாலனைப் பார்த்தேன். அதுவே முதலும் கடைசியுமான சந்திப்பாக அமைந்துவிட்டது. மனச்சோர்வுடன் கும்பகோணம் திரும்பிய கு.ப.ரா. நோய்வாய்ப்பட்டார். நோய் முற்றி, சிகிச்சை பலனளிக்காமல், ஏப்ரல் மாதம் அவர் இறந்து போனார். கு.ப. ராஜகோபாலனைப் பார்ப்பதற்கு முன்னதாக, த. பிச்சமூர்த்தியை துறையூரில் சந்திக்கக்கூடிய வாய்ப்பு எனக்கு கிட்டியது. அந்நாள்களில் அவர், கோயில்களின் நிர்வாகத்தைப் பொறுப்பேற்றுக் கவனித்த அறங்காவல் துறையில் பணிபுரிந்து கொண்டிருந்தார். கிராம ஊழியன் காலத்தில், துறையூருக்கு