பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் & 123 ‘கிராம ஊழியன்’ இதழ் வேலைகளும் வழக்கம்போல் நடந்தன. 1944 ஏப்ரல் இதழ் முதல் அதன் தோற்றம் மாறுதல் பெற்றது. டிம்மி சைலில், அட்டை அமைப்பு புது 'டிசைன் ஏற்று இந்த வடிவ முதலாவது இதழில் கு.ப.ரா.படத்தை அட்டையில் வெளியிட்டு, அவரைப் பற்றிய கட்டுரைகள், கவிதைகள் உள்ளே பிரசுரிக்கப்பட்டன. அது கு.ப.ரா.வின் நினைவுச் சிறப்பிதழாக வெளிவந்தது. கு.ப.ராஜகோபாலன் இறந்து போனதால், சிரமப்பட்ட அவரது குடும்பத்துக்கு நிதிஉதவி செய்ய வேண்டியது அவசியம் என்று அவருடைய நண்பர்கள் கருதினார்கள். எனவே நிதி வசூல் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது. சென்னையில் கலைமகள்’ பத்திரிகையும் கு.ப.ரா.குடும்பத்துக்காக நிதி வசூலில் ஈடுபட்டிருந்தது. பெரிதும் முயன்றும் நிதி அதிகம் சேரவில்லை. குறிப்பிட்ட காலம் வரை வசூலான தொகை கு.ப.ரா.குடும்பத்துக்கு வழங்கப்பட்டது. கலைமகள் வசூலித்த நிதிமுயற்சிக்கும் குறைந்த அளவு தொகை தான் சேர்ந்தது. அதை அவர்கள் தனியாகக் கு.ப.ரா.குடும்பத்துக்கு அளித்தார்கள். இந்த சந்தர்ப்பத்தில் ந.பிச்சமூர்த்தி, கு.ப.ரா.இருவரின் நண்பரும், மற்றொரு ‘மணிக்கொடி எழுத்தாளருமான சிட்டி’ பெ.கோ.சுந்தரராஜன் துறையூருக்கு வந்தார். அவர் திருச்சி வானொலியில் பணிபுரிந்து கொண்டிருந்தார். சிட்டி என்ற பெயரில் நகைச்சுவைக் கட்டுரைகள் எழுதிப் பெயர் பெற்றிருந்தார் அவர். நையாண்டி செய்யும், கிண்டல் பண்ணும் எழுத்துக்கள். அவை சிட்டியின் ரகளை என்று குறிப்பிடப்பட்டன. அவரும் என்னை நண்பனாக ஏற்றுக்கொண்டு பழகினார். சிட்டியும் கிராம ஊழியனில் அடிக்கடி எழுதலானார். ரேடியோ நிலையத்தைச் சேர்ந்த வேறு சில நண்பர்களும் ஊழியனுக்கு எழுதி உதவினார்கள். இலங்கை அன்பர்கள் சிலர் மகிழ்ச்சியுடன் கவிதைகள் எழுதிக்கொண்டிருந்தார்கள். எழுத்தாளர்கள் பத்திரிகைக்காரர்கள் இலக்கிய நண்பர்களின் கவனிப்பையும் நன்மதிப்பையும் பெறும் விதத்தில் கிராம ஊழியன் விஷயச் சிறப்புடன் வளர்ந்து வந்தது. ஆயினும் அதன் பெயர் அதற்கு பாதகமாகவே அமைந்திருந்தது. கிராம ஊழியன் என்ற பெயரைக் கேட்டதும் பார்த்ததும் அது கிராம நலனுக்கும் முன்னேற்றத்துக்கும் பாடுபடுகிற பத்திரிகையாக