பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 * நிலைபெற்ற நினைவுகள் இருக்கும் என்று பலரும் எண்ணுவதே இயல்பாக இருந்தது. அத்தகைய விஷயங்களை எதிர்பார்த்துப் பத்திரிகையை வாங்கியவர்கள், கிராம சம்பந்தமான எழுத்துக்கள் இடம் பெறாமல் என்னென்னவோ இருப்பதைக் கண்டு ஏமாற்றம் அடைந்தார்கள். இத்தகைய பாதிப்பைக் குறைப்பதற்காகவே "கிராம எனும் சொல்லை மிகச் சிறியதாகவும் ஊழியன் என் பதைப் பெரிதாக எடுப்பாகவும் அச்சிட்டு வந்தார்கள். இலக்கியத்தில் ஆர்வமும் ஈடுபாடும் கொண்ட ரசிகர்கள் ஊழியனை வரவேற்று ரசித்துப் பாராட்டத் தவறவில்லை. கு.ப. ராஜகோபாலனின் மரணத்துக்குப் பிறகு கும்பகோண எழுத்தாள அன்பர்கள் பத்திரிகைக்கு நீடித்த ஒத்துழைப்புத்தர விரும்பவில்லை. இதுவரை கு.ப.ராவுக்காக எழுதிக் கொடுத்தோம் இனியும் சும்மா எதற்காக எழுதவேண்டும். பணம் தந்தால் எழுதலாம் என்று அவர்களில் சிலர் கருதினார்கள். ஆனால், எழுத்தாளர்களுக்கு சன்மானம் அளிக்கக்கூடிய நிலையில் கிராம ஊழியன் இருந்ததில்லை. எனவே, வழக்கமாக 'விஷயதானம் செய்து கொண்டிருந்த பலர் தங்கள் பணியை நிறுத்திக் கொண்டார்கள். எனினும், தி.ஜானகிராமனும் எம்.வி. வெங்கடராமும் தொடர்ந்து தங்கள் எழுத்துக்களை அனுப்பி உதவினார்கள். 'அமிர்தம் தொடர் கதை நிறைவு பெறும் வரை ஜானகிராமன் ஊழியனுக்கு எழுதிக் கொண்டிருந்தார். எம்.வி.வி.கதை, கவிதை, மொழிபெயர்ப்பு என்று நீண்டகாலம் எழுதினார். பெண்கள், பெண் உரிமை பற்றி சரத்சந்திரர் எழுதிய நூல் ஒன்றின் மொழிபெயர்ப்பு (எம்.வி. வெங்கடராம் தமிழாக்கம்) நெடுங்காலம் பிரசுரம் பெற்றது. பத்திரிகை காலம் தவறாது மாதம் இருமுறை வந்தாகவேண்டும். எனவே நான் பல புனைபெயர்களில் அதிகமாக எழுத வேண்டியது அவசியமாயிற்று. அவ்வெழுத்துக்கள் வித்தியாசமானவையாக இருந்தன. உயிர்ப்பும் உணர்ச்சியும் வேகமும் புதுமையும் கொண்டிருந்தன. முக்கியமாக, நையாண்டிபாரதி என்ற பெயரில் நான் எழுதிய கட்டுரைகள் கட்டுப்பாடற்று தாராளமாகச் கொடுக்கப் பெற்ற கிண்டல்களும் நையாண்டியும் கலந்து ரசிக்கத்தக்கனவாக இருந்தன. அதனால் அவை பலரது பேச்சுக்கும் பொருளாயின. நையாண்டி பாரதி யார் என்று பலரும் கேட்கலாயினர். எனவே, இவர் தான் நையாண்டி பாரதி என்று ஒரு இதழில் போட்டோ அச்சிடப்பட்டது.