பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் x :35 சிறுபத்திரிகைகள் நடத்துகிறவர்கள் பாடு இன்றும் அப்படித்தான் இருக்கிறது. - என் விருப்பம்போல் கதைகளும் குறுநாவல்களும் புதுமையான சோதனை ரீதியான நாவல்களும் எழுதுவதற்காக நான் இதய ஒலி எனும் கையெழுத்துப் பத்திரிகையையும் மாதம் தோறும் உருவாக்கி வந்தேன். 'இதயஒலி பற்றி அறிய நேர்ந்த ந. பிச்சமூர்த்தி, நீங்கள் ஏன் உங்கள் திறமையையும் உழைப்புச் சக்தியையும் வீணடிக்கிறீர்கள்? என்று கேட்டார். எங்கே, உங்கள் இதயஒலியைப் பார்க்கலாம்' எனக் கேட்டு வாங்கிப் படித்துப் பார்த்தார். ரசித்துப் பாராட்டினார். ‘நன்றாகத் தான் தயாரிக்கிறீர்கள் கையெழுத்துப் பத்திரிகை என்றாலும் தரமான இதழாகத்தான் இருக்கிறது. இதைப் பார்க்கையில், இதைப் பூக்குடலை என்று சொல்லலாம் போல் தோன்றுகிறது. பூக்காரன் பூக்களைச் சரமாகவும் ஆரங்களாகவும் செண்டாகவும் கட்டிக் குடலைக்குள் வைத்துப் பாதுகாக்கிறான். அப்புறமாக அவற்றை விநியோகிக்கிறான். வீடுகளுக்கும் கடைகளுக்கும் தேவைப்படுவோருக்கும் வழங்குகிறான். அதே மாதிரி உங்கள் எழுத்துமலர்களை நீங்கள் வகை வகையாகக் கோர்த்த இந்த இதழில் பத்திரப்படுத்துகிறீர்கள்’ என்று நபிமகிழ்ச்சியோடு சொன்னார். - இதய ஒலி கையெழுத்துப் பத்திரிகையின் பெருமை சிறிது சிறிதாக வெளியேயும் பரவியது. பெரும் அளவில் தெரியவருவதற்கு ஒரு நல்வாய்ப்பு வந்து சேர்ந்தது. திருச்சியிலும் அதன் அருகில் உள்ள பல ஊர்களிலும் அநேக இளைஞர்கள் கையெழுத்துப் பத்திரிகையை ஆர்வத்துடன் எழுதி வளர்த்து வந்தார்கள். பூரீரங்கத்தில் ம.ரா. சுப்பிரமணியன் எனும் ஆரம்ப எழுத்தாளர் ஒட்டல் தொழிலில் ஈடுபட்டிருந்தார். அவர் கையெழுத்துப் பத்திரிகையும் நடத்தி வந்தார். அவருக்கும் அவருடைய நண்பர்கள் சிலருக்கும் ஒரு எண்ணம் எழுந்தது. திருச்சி மாவட்டத்தில் நடத்தப்பெறுகிற கையெழுத்துப் பத்திரிகைகள் பலவற்றையும் ஒரே இடத்தில் சேர்த்து வைத்து ஒரு கண்காட்சி நடத்தலாமே என்று ஆசைப்பட்டார்கள். திட்டம் தீட்டி அதற்கான முயற்சியில் ஈடுபட்டார்கள். வெறும் காட்சியோடு நிறுத்திவிடாமல் கையெழுத்துப் பத்திரிகை மாநாடு ஒன்றையும்