பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் * 13 இரண்டாவது உலகமகா யுத்தம் வலுப்பெற்று, அதன் பாதிப்பு எங்கும் ஏற்படவும், சென்னை நகரிலும் குண்டுகள் விழலாம் என்ற பயபிதி எழுந்தது. அதனால் ஜனங்கள் பெரும்பாலோர் மாநகரை விட்டு வெளியேறினார்கள். பல தொழில் நிறுவனங்கள், சினிமாக் கம்பெனிகள், பத்திரிகை அலுவலகங்கள் சென்னை நகரைத் துறந்து வெளி இடங்களில் தஞ்சம் புகுந்தன. வை. கோவிந்தன் நடத்திய சக்தி பத்திரிகையும் சக்தி பிரசுராலயமும் காரைக்குடிக்கு இடம் பெயர்ந்தன. நாவலாசிரியர் வை.மு. கோதைநாயகி அம்மாள் திருவல்லிக்கேணியிலிருந்து வெளியிட்டு வந்த ஜனக்மோகினி இதழின் அலுவலகத்தை சிங்கப் பெருமாள் கோயில் என்ற சிற்றுாருக்கு மாற்றிக் கொண்டார். அதே மாதிரி பி.எஸ். செட்டியார் தனது பத்திரிகையையும் குடும்பத்தையும் கோயம்புத்துருக்குக் கொண்டு சென்றார். "சினிமா உலகம் தமிழில் வெளிவரத் தொடங்கிய முதலாவது சினிமாப் பத்திரிகை என்ற பெருமை பெற்றது. அது சினிமாச் செய்திகளை மட்டும் வெளியிட்டதில்லை. கதை, கவிதை, சமூகக் கட்டுரைகளையும் பிரசுரம் செய்தது. வருடத்திற்கு மூன்று நான்கு மலர்கள் வெளியிடும் வழக்கத்தைக் கொண்டிருந்தது. பெரும்பாலும் பத்திரிகைகள் விளம்பர வருமானத்தைக் கருத்தில்கொண்டே மலர்கள் வெளியிடுவது வழக்கம். மலருக்கென்று விளம்பரங்கள் மிகுதியாகச் சேகரிக்கப்படும். சாதாரண இதழில் விளம்பரம் வெளியிடுவதற்கான கட்டணத்தை விட அதிகமான கட்டணம் மலர் விளம்பரங்களுக்கு வசூலிக்கப்படும். எனவே, சினிமா உலகம் செட்டியார் மலர் வெளியிடுவதை ஒரு இலாபகரமான பிசினஸ் ஆகவே நடத்தி வந்தார். - பி.எஸ். செட்டியார் சென்னை நகரப் பள்ளிக்கூடம் ஒன்றில் தமிழ்ப்பண்டிதராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். சினிமாத் தொழில் காலூன்றிக் கொண்டிருந்த காலம். வடஇந்தியாவிலிருந்து சினிமாவுக்கென்று அநேக பத்திரிகைகள் வெளிவந்தன. முக்கியமாக, பாபுராவ் பட்டேல் நடத்திய பிலிமிந்தியா’ எனும் ஆங்கில இதழ், நாடு நெடுகிலும் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்தது. அதைப் பார்த்து தமிழிலும் ஒரு சினிமாப் பத்திரிகை நடத்தலாமே என்ற எண்ணம் பி.எஸ். செட்டியாருக்கு ஏற்பட்டது. (அவரது முழுப்பெயர் பக்கிரிசாமிச் செட்டியார் என்பதாகும்.) சினிமாத் துறையிலும் அவர் அடி எடுத்து வைத்திருந்தார்.