பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 நிலைபெற்ற நினைவுகள் புத்தகங்கள் வெளியிடலாம் என்று தீர்மானித்தார்கள். முதலில் எனது சிறுகதைகளை ஒரு புத்தகமாக்கலாம் என்று முடிவு செய்து, எனக்கு எழுதினார்கள். நான் பன்னிரண்டு கதைகள் அனுப்பினேன். தொகுப்புக்கு 'கல்யாணி முதலிய கதைகள்’ என்று பெயர் சூட்டலாம் என்றும் தெரிவித்தேன். கல்யாணி எனும் அழகான பெயருக்கு ஏற்ப வனப்பும் வசீகரமும் நிறைந்த அட்டைப்படம் அமைக்க முடியும் என்ற எண்ணம் எனக்கு. சில மாதங்களில் புத்தகம் தயாராகி வெளிவந்தது. ஆனால் புத்தகத்தின் வடிவ அமைப்பும் அட்டைச்சித்திரமும் வசீகரமாகவே இல்லை. அதன் தோற்றம் எனக்கு திருப்தி தரவில்லை. இருப்பினும், எப்படியோ எனது முதலாவது சிறுகதைத் தொகுப்பு வெளிவந்து விட்டதே என்ற மகிழ்ச்சி தான் எனக்கு. இது 1944ல் நிகழ்ந்தது. 1946ல் எனது இரண்டாவது சிறுகதைத் தொகுப்பான ‘நாட்டியக்காரி வந்தது. இது வெளிவர நேர்ந்ததும் விநோதமான ஒரு அடிப்படையிலே தான். "ممن நான் திருநெல்வேலியில் வசித்த நாள்களில் எனக்கு நண்பர்களான இளைஞர்களில் எஸ். சிதம்பரம் என்பவரும் ஒருவர். கல்லூரி மாணவர். தி.க.சியின் சிநேகிதர். திருவனந்தபுரம் சிதம்பரம் செல்வந்தர் வீட்டுப்பிள்ளை. அவருடைய தந்தை திருவனந்த புரத்தில் பிரபலமான வைர வியாபாரி. அவருக்கு மிகுந்த சொத்து இருந்தது. வைர வியாபாரம், சொத்து அனைத்துக்கும் வாரிசு ஒரே மகனான சிதம்பரம் தான். சிதம்பரத்தின் சித்தப்பாவுக்குப் பிள்ளை கிடையாது. அவரது சொத்துகளுக்கும் சிதம்பரம் தான் வாரிசு என்ற நிலை இருந்தது. சிதம்பரம் உல்லாச குனங்கள் பெற்ற 'ஜாலி பிரதர்’. திருநெல்வேலியில் உறவினர்கள் வீட்டில் தங்கி, இந்துக்கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார். படிப்பு ஒத்துவராததால் அதை அரைகுறையாக விட்டுவிட்டு திருவனந்தபுரம் போய், 'காற்றடிக்கும் சோலையிலே கனிஅடித்துத் திரிகின்ற செல்லப்பிள்ளை'யாக நாளோட்டலானார். அந்த நிலைமையிலும், வாழ்க்கையிலே ஏதாவது செய்து எப்படியாவது பெயர் பெறவேண்டும் என்ற ஆசை அவருள் வளர்ந்தது. கவிதைகள் எழுதலானார். பத்திரிகைகளுக்கு அனுப்பினார். ஒன்றிரண்டு பிரசுரம் பெற்றன. அதிகமாகக் கவிதைகள் எழுதி அவற்றை புத்தகமாக்கி வெளியிட வேண்டும் என்று விரும்பினார். -