பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 & நிலைபெற்ற நினைவுகள் அத்துடன் சிதம்பரத்தின் இலக்கிய ஆர்வம் அடங்கிவிட்டது. அவருடைய உற்சாகமும் வேகமும் திசைமாறிப்போயின. அவருக்குத் திருமணமாகிக் குழந்தைகள் இருந்தன. ஆயினும் செல்வப் பெருக்கும் கட்டுப்பாடற்ற போக்கும் அவரை விபரீத வழிகளில் செல்லத் துண்டின. திருவனந்தபுரத்தில் அவருக்குச் சேர்ந்த நண்பர்களும் அப்படி வந்து வாய்த்தார்கள். இலக்கியத்தில் இருந்து அவர் போட்டோக்கலை பக்கம் கவனம் செலுத்தலானார். அழகு அழகான அருமையான படங்கள் எடுத்து முன்னேற வேண்டும், போட்டோக்கலை மூலம் இந்தியாவின் கவனத்தையே பெற்றுவிடலாம் என்று அவர் ஆசைகள் வளர்த்தார். அதற்காக ஏராளமான பணம் செலவு செய்தார். அவரது இலக்கிய உணர்வும், நல்ல உள்ளமும், திருவனந்தபுரத்தில் வந்து தங்கிய காசநோயாளியான புதுமைப்பித்தனுக்கு அவருடைய இறுதிக்காலத்தில் தாராளமாகப் பண உதவிகள் புரியவும், அருகிலிருந்து உதவிகள் செய்யவும் அவரை ஊக்கின. புதுமைப்பித்தன் மரணம் வரை சிதம்பரம் அவர் கூடவே இருந்து தேவைப்பட்ட உதவிகளை அன்புடன் செய்தார்.