பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான் கண்ட வல்லிக்கண்ணன் கழனியூரன் வல்லிக்கண்னன் என்ற ஆளுமையை, இப்போது அவர் மறைந்துவிட்ட இந்த நேரத்தில் நினைத்துப் பார்க்கும்போது வியப்பாக இருக்கிறது. நம்மோடு நம் கண்ணெதிரே வாழ்ந்த வல்லிக்கண்ணனின் வாழ்வில் இருந்த எளிமையும், தியாகமும் நம்மைச் சிந்திக்க வைக்கிறது. வரலாற்று நாயகர்கள் சிலரின் வாழ்வில் நடந்த சில சம்பவங்களைப் படிக்கும்போது. நம் மனம் நம்ப மறுக்கும். வ.கவின் வாழ்க்கை வரலாற்றை, இன்னும் முப்பது, நாற்பது வருசம் கழித்து அடுத்த தலைமுறையைச் சேர்ந்த தமிழ் மாணவர் ஒருவர் படித்து “இப்படியும் ஒருவர் வாழ்ந்தாரா?” என்று மூக்கின் மேல் விரல் வைக்கக் கூடும். ‘எளிமை, தன்னடக்கம் என்ற சொற்களின் இலக்கணமாகத் திகழ்ந்தார் வ.க, அவரது உடைமைகள் ரொம்பக் குறைவு. அவரது தேவைகளும் மிக, மிகக் குறைவு. வ.க. அவர்களின் எழுத்துக்களோடு எனக்கு மிகுந்த பரிச்சயம் உண்டு. அவரை தூரத்தில் இருந்தும் பாத்திருக்கிறேன் பக்கத்திலிருந்தும் பார்த்திருக்கிறேன். அவரோடு பத்து நாட்கள் வாழ்ந்துமிருக்கிறேன். பல்வேறு சூழல்களில் கலந்துரையாடியும் இருக்கிறேன். எனவே வகவைப்பற்றிப் பேசுவதற்கும் எழுதுவதற்கும் எனக்குத் தகுதி இருக்கிறதென்று கருதுகிறேன். நம் தேசத்தந்தை மகாத்மா காந்தியவர்கள் எளிமையாக வாழ்வது குறித்துப் பேசினார். அதன்படி வாழ்ந்தும் காட்டினார். காந்தியக் கொள்கைகளில் ஒன்று எளிமையாக வாழ்வது. அக் கொள்கையை வ.க. காலமெல்லாம் கடைப்பிடித்தார். வ.க. குளிர் காலமானாலும், மழைக்காலமானாலும் தினமும் அதிகாலை ஐந்து மணிக்கே படுக்கையைவிட்டு எழுந்திருக்கும்