பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 & நிலைபெற்ற நினைவுகள் பழக்கத்தைக் காலமெல்லாம் கடைப்பிடித்தார். அதிகாலையில் எழுந்து காலைக் கடன்களை முடித்து விட்டுத் தினமும் குளிர்ந்த தண்ணிரில் குளித்து விடுவார்கள். 2005 மே மாதத்தில் என் வீட்டில் தங்கி இருந்தகாலத்தில், ஒரு நாளாவது அதிகாலையில் வ.க. படுக்கையை விட்டு எழுந்திருக்கும் காட்சியைப் பார்த்து விட வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் முடியவில்லை! நான் காலையில் எழுந்திருச்சி அவர் தங்கி இருந்த மச்சிக்குப் போனால் மச்சின் கொடியில் ஈரமான கோவணத்துணி காற்றில் ஆடி அசைந்து என்னை வரவேற்கும். வ.க. மச்சின் உள்ளே அமர்ந்து ஏதாவது ஒரு புத்தகத்தை எடுத்து அந்த அதிகாலை நேரத்திலும் படித்துக் கொண்டிருப்பார். என் வீட்டில் வகதங்கி இருந்தபோது அவருக்கு வயது எண்பத்தி நான்கு. கோவணம் கட்டும் பழக்கம் என் தாத்தாவுக்கு இருந்தது என்று பிறர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் 2005 வரை கோவணம் கட்டி வாழ்ந்த மனிதராக நான் வ.க. அவர்களைத்தான் பார்த்தேன். சாதாரண கோபால் பல்பொடி வைத்துத்தான் பல் துலக்குகிறார் என்பதையும் ஒரு நாள் நேர்பேச்சின் மூலம் தெரிந்து கொண்டேன். பேஸ்ட், பிரஸ், வாசனைசோப் வாசனைத் திரவியங்கள், முகத்துக்கு பவுடர் என்பன போன்ற எந்த விதமான ஆடம்பரப் பொருள்களையும் பயன்படுத்தாமல், ஆரோக்கியமாகவும், தூய்மையாகவும் இந்த நூற்றாண்டிலும் வாழமுடியும் என்று வாழ்ந்து காட்டினார் வ.க. பயணத்தின்போதும் அவரின் உடைமைகள் மிகச் சாதாரணமானது ஒரு துணிப்பை, அதனுள் ஒரு துண்டு மாற்றிக் கொள்ள பச்சைக்கரை போட்ட ஒரு துவை வேட்டி சாதாரண அரைக்கைச் சட்டை அத்தோடு ஒரு லங்கோடு; மற்றும் இரண்டு கோவணத்துணிகள். அனைத்துமே பருத்தித் துணியால் நெய்யப்பட்ட ஆடைகள்தான். அவைகளை மடிப்புக் களையாமல் தோய்த்துத்தான் அணிய வேண்டும் என்றும் அவர் நினைத்ததில்லை.