பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 & நிலைபெற்ற நினைவுகள் அனுபவத்தை மையமாகக்கொண்டு ஒரு பயண நூல் எழுத வேண்டும்” என்ற பேராசை இருந்தது. அவரது வாழ்நாளில் அந்த ஆசை நிறைவேறவே இல்லை. வ.க. அவர்களின் நிறைவேறாத ஆசைகளில் இதுவும் ஒன்றாகும். வக ஒரு நடை மன்னர். அவர் நடப்பதற்கு சலித்ததே இல்லை “பஸ்ஸுக்குக் காத்திருக்கும் நேரத்தில் நடந்தே நாம் செல்லவேண்டிய இடத்திற்குச் சென்று விடலாம். நடப்பது உடம்பிற்கும் நல்லது” என்று அடிக்கடி வ.க. சொல்வார். திருநெல்வேலியில் இருந்து வீட்டில் சொல்லாமல் கொள்ளாமல் ஒரு துணிப்பையுடன் நடந்தே சென்னை நோக்கிப் பயணமான, சேதியை, மிக உருக்கமாக இந்நூலில் பதிவு செய்துள்ளார் வ.க. காலையில் இரண்டு இட்லி, ஒரு கப் காப்பி, மதியம், ஒருசிறு குழந்தை சாப்பிடுகிற அளவுக்குச்சாதம் பின் இரவில் இரண்டு இட்லி, ஒரு டம்பளர் பால். இடையில் கிடைத்தால் ஏதாவது ஒரு பழம் என்று மிகச் சாதாரணமாகச் சாப்பிட்டு உயிர் வாழ்ந்தவர் శt.5. என் வீட்டில் வக வுக்கு மிகவும் பிடித்த இன்னொரு விசயம். பசுவின்பால். மச்சியில் இருந்து அவர் கண்ணால் பார்க்க, பசுவில் இருந்து பாலைக்கறந்து அதைக் காச்சிக் கொடுத்தேன். "கொழுப்பு நீக்கப்பட்ட பாக்கெட் பாலில் ருசியே இல்லை. இங்கேதான் உண்மையான பசும்பாலைக் குடிக்கிறேன். மணமாகவும், ருசியாகவும் இருக்கிறது பால்” என்று என்னிடம் சொன்னார். "சுகாதாரமான, காற்றோட்டமான, நெருக்கடியில்லாத, கூச்சல், குழப்பம் இல்லாத இந்த கிராமத்து வாழ்க்கை ரொம்பப் பிடிக்கிறது. என்ன செய்ய சென்னை வாழ்க்கைதான் வாழவேண்டும் என்று விதித்திருக்கிறது” என்று ஒரு முறை கிராமத்து வாழ்க்கையைச் சிலாகித்துக் கூறினார். இராஜவல்லிபுரத்து வீட்டை விற்கும் வரை ஆண்டுதோறும் ஒரிரு மாதங்கள், இராஜவல்லிபுரத்தில் வந்து நான் தங்குவதுண்டு. கிராமத்து வாழ்க்கையின் அனுபவத்திற்காகவே அவ்வாறு நான் வருவேன். இராஜவல்லிபுரத்தில் இருக்கும்வரை தினமும் காலையில் தாமிரபரணிக்குச் சென்று குளித்து விட்டு வருவேன். மீண்டும் மாலையில் வெயில் குறைந்த பிறகு, காலார நடந்து தாமிரபரணி நதிக்கரை மணலில் போய் உக்காந்து, இயற்கையை ரசித்த படியே காற்று வாங்குவேன். சென்னையில் இருக்கும் போதும் முன்பெல்லாம் காலார நடந்தே மாலை வேளைகளில், கடற்கரை