பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் & 151 அவர்களின் நாட்டுப்புறவியல் சார்ந்த படைப்புகள் இடம் பெற்றன. 20-வது கதைசொல்லி இதழில் இடம் பெற்ற வல்லிக்கண்ணனின் நாட்டுப் புறக்கதைகள் தான் அவர் தன் வாழ்நாளில் கடைசியாக எழுதிய படைப்பு என்பதும் குறிப்பிடத்தக்கது. வ.க. அவர்களுக்கு அன்பளிப்பாக வரும் நாட்டுப்புறவியல் சார்ந்த புத்தகம் எதுவாக இருந்தாலும் அவற்றைப் படித்து முடித்த பின்பு. அந்நூலைக்குறித்து கட்டுரை அல்லது கடிதம் எழுதி முடித்தபின்பு அந்நூலின் மேல், ஒரு உறை இட்டு அதன் உச்சியில் 'அச்சிட்ட நூல் மட்டும்’ என்று சிவப்பு மையால் எழுதி. இருபத்தைந்து பைசா தபால் தலையை அதில் ஒட்டி, உறைமேல் என் முகவரியை எழுதி எனக்கு அனுப்பிவிடுவார். நாட்டுப்புறவியல் சார்பான கட்டுரைகளை எழுதுகிற எனக்கு அந்நூல் உதவும் என்பதால் அவர்களே தன் கைக்காசு போட்டு எனக்கு அனுப்பி விடுவார் எனக்கு மட்டும் தான் இப்படி அனுப்புகிறார் என நினைத்திருந்தேன். நேர் பேச்சில் ஒருநாள் புத்தகங்கள் அனுப்புவது குறித்துப் பேசும்போதுதான் தமிழகம் முழுவதும் உள்ள அன்பர்களுக்கு இவ்வாறு தான் படித்து முடித்து துறைசார்ந்த நூல்களை அந்தந்த துறை சார்ந்த ஆர்வலர்களுக்கு தன் கைகாக போட்டு தபால் தலை ஒட்டி அனுப்புகிறார் என்ற செய்தியைத் தெரிந்து கொண்டேன். தனிமையில் எனக்கு வ.க. சில பாலியல் நாட்டுப் புறக்கதை களையும் கூறினார். இப்போது நான், நினைத்துப் பார்க்கிறேன். வ.க.வுடன் செலவழிந்த பொழுதுகளில் அவர் சொன்ன நாட்டுப்புறயில் தொடர்பான தரவுகளை ஒலிப்பதிவு செய்யாமலும், குறிப்பெடுக்காமலும் விட்டு விட்டோமே என்று. வ.க.வுக்குள் இருந்த நாட்டுப்புறக்கதையாளன் வெளிப்படவே இல்லை. ஏதோ, நான் தூண்டியதால் ஒரு சில நாட்டுப் புறக்கதைகள் கதைசொல்லி இதழில் அச்சில் பதிவாகின. அவைகள் கடுகு அளவு தான். இன்னும் மலையளவு நாட்டார் தரவுகள் அவர் நெஞ்சுக்குள் புதைந்து கிடந்தன. இனி அவைகளை யாரால் எப்படி வெளிக்கொணர முடியும்? ஒரு நாள் தென்காசி அருகில் ஆய்க்குடி என்ற ஊரில் உள்ள அமர்சேவா சங்கம் என்ற உடல்குறை உள்ள மாணவர்களுக்கான பள்ளியில் இருந்து, வ.க.அவர்கள் பேச வேண்டும் என்று அழைப்பு வந்தது.