பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் & 153 மாணவர்கள் ரொம்பவும் ரசித்துக் கேட்டார்கள், வ.க.வின் மேடைப் பேச்சுகளைப் பலமுறை கேட்ட எனக்கு, அன்று அவர் மாணவர்களுக்குக் கதைகள் சொன்னவிதம் ரொம்ப அதிசயத்தைத் தித்தது. தலைவரின் பின்னுரையில் என்பங்குக்கு நானும் ஒரு நீதிக்கதையைச் சொன்னேன். அன்றைய நிகழ்ச்சியைக் கதை சொல்லல் நிகழ்ச்சியாக அமைக்க வேண்டும் என்பதால்தான் என்னை, வ.கதலைமை ஏற்கச் சொல்லி இருக்கிறார் என்ற உண்மையைப் பின்னால்தான் புரிந்து கொண்டேன். எப்படியோ, என் வாழ்நாளில் வக, கலந்து கொண்ட நிகழ்ச்சிக்குத் தலைமை ஏற்கும் பாக்கியம் அன்று வகவால் எனக்குக் கிடைத்தது. வ.கசென்னை சென்ற ஒரு வாரத்திற்குப் பிறகு, என் முகவரிக்கு ஆய்குடி அமர்சேவா சங்கத்தின் செயலரிடம் இருந்து ஒரு கடிதம் வந்தது. அந்தக் கடிதம் “தாங்கள் அழைத்து வந்து, எங்கள் பள்ளி மாணவர்களுக்கு கதைகள் சொன்ன மூத்த எழுத்தாளர் திரு.வல்லிக்கண்ணன் அவர்கள் ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை, எங்கள் பள்ளியின் மாணவர்களுக்கு அனுப்பியுள்ளார். எனவே, அன்னாரை அழைத்து வந்தவர் என்பதற்காகத் தாங்களுக்கும் எங்கள் பள்ளி மாணவர்கள் சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்” என்ற சேதியைச் சொன்னது. “எனக்கு.அடடா” என்றிருந்தது. வ.க.அந்தப்பள்ளி மாணவர்களுக்கு நன்கொடை அனுப்பவேண்டும் என்ற செய்தியை என்னிடம் தெரிவிக்கவும் இல்லை. சென்னை சென்றபின் எழுதிய கடிதத்திலும். 'அமர்சேவா சங்க மாணவர்களுக்கு நிதி உதவி செய்து உள்ளேன் என்று தெரிவிக்கவும் இல்லை. அப்பள்ளி செயலாளர் அக்கடிதத்தை எனக்கு எழுதவில்லை என்றால் எனக்கும் அச்செய்தி தெரிந்திருக்காது. வ.க. அவர்களின் பொருளாதார நிலை உலகம் அறிந்த ஒன்றுதான். என்றாலும் அவர் மூளை வளர்ச்சி குன்றிய மாணவர்களுக்குத் தன்னால் இயன்ற பொருள் உதவியை எவ்வித விளம்பரமும் இன்றிச் செய்தது. என்னை பரவசப் படுத்தியது. வ.க. ஜவஹர்லால் நேருவைப்போல ஆத்திகரும் அல்ல. நாத்திகரும் அல்ல. அவர் ஒரு நிர்ஈஸ்வரவாதி (AGNOSTC). என்னோடு தங்கி இருந்த நாட்களில், நடைபயிற்சியின்போது, எத்தனையோ, கோயில்களைக் கடந்து சென்றிருக்கிறார். சில கோயில்களின் உள்ளே, சென்று அக்கோயில்களின் அழகையும் ரசித்திருக்கிறார். குறிப்பாக எங்கள் ஊரின் அருகில் உள்ள