பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 & நிலைபெற்ற நினைவுகள் வீரகேரளம் புதுர் நவநீத கிருஷ்ணசாமி கோயிலின் உள்ளே சென்று, அக்கோயிலில் உள்ள சிற்பங்களையும், ஒவியங்களையும் பார்த்து பரவசப்பட்டார். ஆனால் எந்தக் கோயிலிலும் அவர் சாமி கும்பிடவே இல்லை: வ.க. அவர்களை தமிழ் அறிவுலகவாதிகளில் சிலர் மிகக் கடுமையாகச் சாடி இருக்கின்றார்கள். அவர் படைப்புகளின் மீதும் மிகக் கடுமையான விமர்சனங்களை வைத்திருக்கிறார்கள். வகவுடன் பேசும்போது நான் அது பற்றியும் கேட்டேன். அதற்கு அவர் சொன்ன பதில் ‘உலகம் பல விதம் என்பதுதான். "கடிதம் எழுதுகிறவர்களுக்கு எல்லாம் சளைக்காமல் பதில் கடிதம் எழுதுகின்றீர்களே. அதைத் தவிர்க்கலாமே.” என்று ஒரு முறை கேட்டபோது, என்னைப் பார்த்து ஒருவன் கையெடுத்து 'ஐயா, வணக்கம்’ என்று சொல்கிறபோது என்னால் பதிலுக்கு “வணக்கம் என்று சொல்லாமல் இருக்கமுடியவில்லை! அது போல என்னை மதித்துக் கடிதம் எழுதுகிறவர்களுக்கு நான் பதில் கடிதம் எழுதுகிறேன்” என்று பதில் சொன்னார். அந்த பதில் எனக்கு நிறைவாக இருந்தது. சுத்த அசைவப் பிரியர்களான எங்கள் வீட்டில் வீரசைவரான வ.க. அவர்கள் பத்து நாட்கள் எந்தவித முகச்சுழிப்பும், வருத்தமும் இன்றித் தங்கினார். வ.க.வுக்காக, நாங்கள் குடும்பத்துடன் அவர் எங்கள் வீட்டில் தங்கிய காலத்தில் நாங்களும் சுத்த சைவர்களாக வாழ்ந்தோம் என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும். வ.க. எங்களோடு தங்கியது எங்களுக்கு ஒரு சுமையாகவே இல்லை. தோளில் ஒரு குருவியை வைத்துக்கொண்டு அல்லது. மார்பில் ஒரு ரோஜாப்பூவைச் சுமந்துகொண்டு பயணிப்பதைப் போன்ற இனிய அனுபவமாகத்தான் இருந்தது. 'வ.க. அவர்களை வசைபாடிய கூட்டத்திற்கு அவரின் முழுமையான ஆளுமைகள் தெரியுமா?’ என்ற ஐயப்பாடு எனக்கு எப்போதும் உள்ளது. சிற்றிலக்கிய வட்டாரத்திலும் எந்த வித இசங்களுக்குள்ளும், எந்த வித குறுங்குழுக்குள்ளும் சிக்கிக் கொள்ளாமல் வ.க.வாழ்ந்தார். தன்னுடைய எண்பத்து ஆறு வயதுவரை, மெலிந்த அந்த விரல்கள் எழுபத்தி இரண்டு நூல்களை எழுதியுள்ளது. அவரது பன்முகப்படைப்புக்களை தமிழ் அறிவுலகம் எளிதில் புறந்தள்ளி விட முடியாது.