பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 3 155 வ.க. அவர்கள் கவிஞராக, சிறுகதை ஆசிரியராக, நாவலாசிரியராக, இதழாளராக, மொழிபெயர்ப்பாளராக, திறனாய்வாளராக, நாடக ஆசிரியராக, இலக்கிய வரலாற்றாசிரியராக, சினிமா வசனகர்த்தாவாக உழைத்திருக்கின்றார். அதிகாலையில் எழுந்தது முதல் இரவு படுக்கச்செல்லும்வரை படிப்பது, எழுதுவது, நண்பர்களுடன் கலந்துரையாடுவது என்று மட்டுமே சுமார் எழுபது ஆண்டுகள் இலக்கியத்திற்காகவே வாழ்ந்த சாதனையாளர் அவர் வ.க. தன் எழுத்தின் பலத்தில் நிற்கிறார்.

  • பாரதிக்குப்பின் உரைநடை

தமிழில் சிறுபத்திரிகைகள் சரஸ்வதி காலம். புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

தீபம்யுகம். போன்ற நூல்கள் என்றும் வல்லிக்கண்ணனின் சாதனைகளை நிலை நாட்டிக் கொண்டே இருக்கும். மேலே கண்ட வ.க.வின் நூல்களின் மேல் மறுவாசிப்பும், ஆய்வுகளும் தேவை. வ.க.வின் எழுபதாண்டுகால தேடலும், வாசிப்பும், உழைப்பும் வியக்கத்தக்கதாகும். 'வ.க. ஒரு வரலாற்று நாயகர் அவர் ஒரு அழகிய முன் மாதிரி. மூன்று தலைமுறை எழுத்தாளர்களின் கவனத்தைப் பெற்றவர், அவர்களின் அன்பையும் ஆதரவையும் பெற்றவர். தற்காலத் தமிழ் இலக்கிய வரலாற்றில் அழுத்தமான தடம்பதித்தவர். 2006- நவம்பர் 9-ல், இலட்சக்கணக்கான பக்கங்களை வாசித்துக் கடந்து வந்த அந்த கண்கள் மூடிவிட்டன. ஆயிரக்கணக்கான பக்கங்களை எழுதிய அந்தக் கை, ஒய்ந்து விட்டது. நூற்றுக் கணக்கான மைல் தூரங்களை நடந்தே கடந்த அந்தக் கால்கள் நீட்டி நிமிர்ந்து விட்டன. ஜாதி, மத, மொழி, இன வேறுபாடு பார்க்காமல், சக, மனிதர்கள் மேல் அன்பைச் சொறிந்த அந்த இதயம் நின்று விட்டது. வக மறைந்தபோதுதான் தமிழகத்தில், அவருக்காகக் கண்ணிர் சிந்த இத்தனை இலக்கிய ஆர்வலர்கள் இருக்கிறார்கள் என்ற உண்மை இலக்கிய உலகுக்குத் தெரிந்தது.