பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 & நிலைபெற்ற நினைவுகள் வழக்கம்போல் சக்திதாசன் சுப்பிரமணியன் அவருடைய ‘நவசக்தி மாத இதழில் எனது கதைகளை வரவேற்று வெளியிட்டு மகிழ்ந்தார். - இதனால் எல்லாம் எழுதுவதில் மேலும் மேலும் எழுதிக் கொண்டேயிருப்பதில் எனக்கு ஊக்கமும் உற்சாகமும் ஏற்பட்டது. எழுதுவதையும் படிப்பதையும் தவிர வேறு வேலை எதுவுமில்லை எனககு. அதிகாலை 5.30 மணிக்கு எழுவது. குளிப்பதற்காக வாய்க்கால் கரை ஓரமாக ஒன்றரை - இரண்டு மைல் அளவு முன் சென்று, தண்ணீர் தெளிவாகவும் சுத்தமாகவும் ஒடும் இடத்தை அடைவதை வழக்கமாகக் கொண்டேன். வீட்டைத் தொட்டபடி வாய்க்கால் சென்றது. பெரும்பாலும் நீர் நிறைந்தே போகும். கோடைகாலத்தில் நீரின்றி வாய்க்கால் வறண்டு கிடக்கும். குளிப்பதற்கென்று வரிசையாக படிக்கட்டுகள் கட்டிவிடப்பட்டிருந்தன. அவற்றைப் பயன்படுத்தி ஆண்களும் பெண்களும் சிறுவர்களும் குளித்துக் கொண்டிருப்பார்கள். பெண்கள் குடங்களில் தண்ணிர் மொண்டு செல்வதும் உண்டு. ஆனால் தண்ணிர் சுகாதாரக் குறைவானதாகவே இருக்கும். வாய்க்காலை ஒட்டியிருந்த வீடுகளில் கக்கூஸ்களைக் கழுவித் தண்ணிரை வெளியேற்றுவதற்கான வசதிகள் செய்யப்பட்டிருக்கும். அப்படிக் கழுவப்படுகிற அசுத்த நீர் முழுவதும் வாய்க்காலில் தான் வந்து கலக்கும். நகர மக்கள் அதைக் கண்டு கொள்வதில்லை; பெரிதுபடுத்துவதுமில்லை. காலப்போக்கில் அந்தப் பெரிய வாய்க்கால் சாக்கடைத்தன்மை பெற்றுவிட்டது. நீலோற்பலச் செடிகள் மண்டி வளர்ந்து நீர்ப்பரப்பை மறைக்கலாயின. நீர் ஒடும் தன்மை குன்றி, தேக்கநிலை பெறுவதும் ஏற்பட்டது. வாய்க்காலில் தண்ணிர் பெருகி ஓடிக் கொண்டிருந்த பாசி கொடிகளும் நீலோற்பலச் செடிகளும் களையாகப் படரத் தொடங்கியிராத அந்நாள்களிலேயே, நான் அந்த நீரில் குளிக்க விரும்பவில்லை. கரை மீதே நடந்து, நகர எல்லையைக் கடந்து பாட்டப்பத்து என்கிற கிராமத்துக்கும் அப்பால் சென்று, குளிப்பதையே விரும்பினேன். அங்கே தண்ணிர் சுத்தமாக ஓடியது. சூழ்நிலையும் அழகும் அமைதியும் நிறைந்து காணப்பட்டது. அவ்வளவு துரம் நடந்து குளிப்பதற்கென்று எவரும் அங்கே