பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் & 17 வரமாட்டார்கள். ஆகவே என் மனசுக்கு மிகப்பிடித்த இடமாக அது இருந்தது. குளித்துவிட்டு வந்து, காலை உணவு உண்டபிறகு, படிப்பதையும் எழுதுவதையும் கவனிப்பது தான் என் வேலையாயிற்று. மாடி மிக வசதியாக இருந்தது. நான் வெளியே சென்று யாரையும் பார்த்துப் பேச விரும்பியதில்லை. என்னைத் தேடி வருவோர் எவருமிலர். ஆகவே மிகுந்த நிம்மதி. மாலையில் நாலரை மணிக்குமேல் எங்காவது உலாப்போவதை வழக்கமாக்கினேன். அமைதியான பேட்டை ரோடில் நெடுந்தொலைவு நடப்பது; ரயில்வே நிலையம் பக்கம் போய் தண்டவாளத்தின் ஒரமாக வெகு தூரம் நடந்து திரும்புவது, எப்பவாவது, ஜனசந்தடியும் போக்குவரத்தும் நிறைந்த சுவாமி நெல்லையப்பர் நெடுஞ்சாலையில் நடப்பது, இது எனது பொழுதுபோக்கு ஆயிற்று. சில நாள்களில் தம்பி முருகேசன் உடன்வருவான். பெரும்பாலும் நான் மட்டுமே மாலை உலாப் போய் வந்து கொண்டிருந்தேன். நான் திருநெல்வேலி சேர்ந்த சிறிது காலத்திலேயே நெல்லை வாலிபர் சங்கம் இளைஞர்கள் என்னைக் காண வந்தார்கள். காலேஜ் மாணவர்கள் தங்கள் சங்கத்தைப் பற்றியும், உறுப்பினர்கள் பற்றியும் சொன்னார்கள் தி.க. சிவசங்கரன் உங்களைப் பார்க்க வேண்டும் என்று ஆர்வமாக இருந்தார். எங்களோடு வந்திருப்பார். ஆனால் இன்று அவருக்கு வேறு அலுவல் வந்துவிட்டது. அதனால் வரமுடியவில்லை. எழுதுவதில் ஆர்வம் உடையவர். அவர் எழுதிய இரண்டு கட்டுரைகளைக் கொடுத்து அனுப்பினார். இவற்றை படித்துப் பாருங்கள். இன்னொரு நாள் வந்து அவர் உங்களைச் சந்திப்பார் என்றார்கள். எழுத்துப் பிரதிகளைக் கொடுத்தார்கள். அவர்கள் சங்கத்துக்கு வந்து ஒருநாள் நான் பாரதியைப் பற்றிப் பேசவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள் நானும் இசைவு தெரிவித்தேன். தி.க.சிவசங்கரன் எழுதிய கட்டுரைகளைப் படித்துப் பார்த்தேன். வ.ரா.வின் நடைச்சித்திரம் பாணியில் எழுதப் பட்டிருந்தன. ஒரு கட்டுரை வண்டிக்காரன் பற்றியது. மற்றொன்று வீட்டு வேலைக்காரி பற்றியது. பரவால்லே ரகம். சில தினங்களில் சிவசங்கரன், ஒரு நண்பருடன் வந்தார். நெல்லை வாலிபர் சங்கக் கூட்டத்தின் அச்சடித்த அழைப்பைத் தந்தார். பாரதி பற்றி நானும், பொதுவுடைமை என்றால் என்ன