பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 & நிலைபெற்ற நினைவுகள் என்பது குறித்து தொ.மு.சி. ரகுநாதனும் பேசுவதாக அழைப்பு அறிவித்தது. குறித்த தினத்தில் கூட்டம் நடந்தது. நாற்பது பேர்கள் இருக்கலாம். நெல்லை வாலிபர் சங்கம் இளைஞர்கள் மற்றும் மணியரசுக் கழகத்தை சேர்ந்தவர்கள் வந்திருந்தார்கள். மணியரசுக் கழகத்தில் ரகுநாதன் முக்கிய பொறுப்பு வகித்தார். திருநெல்வேலி அம்மன் சன்னதித் தெருவில் ஒது வீட்டின் மாடியில் அது செயல்பட்டு வந்தது. 'மணியரசு” எனற கையெழுத்துப் பத்திரிகையையும் அவர்கள் நடத்திக்கொண்டிருந்தார்கள். ரகுநாதன் பத்திரிகையை கவனித்துவந்தார். அக்கழகத்தில் கவிதை, கட்டுரை எழுதக்கூடியவர்களும் இருந்தார்கள். முதலில் ரகுநாதன் பேசினார். நன்கு பேசும் திறமையை அவர் பெற்றிருந்தார். சுமார் அரைமணி நேரம் பொதுவுடைமை என்றால் என்ன என்று அவர் விளக்கினார் அடுத்து பாரதி பற்றி நான் பேசினேன். எனக்கு பேச்ச்ாற்றல் கிடையாது. தற்சமயம் கூட்டங்களில் பேசுகிற அளவுகூட அந்நாள்களில் என்னால் பேசமுடிந்ததில்லை. என் பேச்சு கால்மணி நேரத்துக்குள்ளேயே முடிந்துவிட்டது. நான் சிறப்பாகப் பேசுவேன் என்று எதிர்பார்த்திருந்த நெல்லை வாலிபர்களுக்கு அது ஏமாற்றமாகவே இருந்தது. பொதுவுடைமை குறித்து மேலும் சில விளக்கங்கள் கொடுக்க வேண்டும் என்று ரகுநாதன் மீண்டும் பேசினார். நல்ல கருத்துக்களைச் சொன்னார். பெரும் பேச்சாளனாக வளர வேண்டும் எனும் ஆசை என்றுமே எனக்கு இருந்ததில்லை. பேசக்கூடிய வாய்ப்பு வந்தால் கூட நான் அதைத் தட்டிக்கழிப்பதிலேயே கருத்தாக இருப்பேன். ஆயினும் நெல்லை வாலிபர்கள் என்னை விட்டுவிடத் தயாராக இல்லை. அவர்களில் பலர் பேச்சுக்கலையில் வளர்ச்சி பெறவேண்டும் என்று விரும்பினார்கள். சிலர் எழுத்து முயற்சியில் ஈடுபட வேண்டும் என்றும் ஆசைப்பட்டார்கள். அதற்காக சங்கத்தை பலப்படுத்த வேண்டும்; வாரம் ஒரு கூட்டம் நடத்த வேண்டும்; மணியரசுக் கழகத்தினரைப்போல தாங்களும் கையெழுத்துப் பத்திரிகை நடத்த வேண்டும் என்று அவர்கள் திட்டமிட்டார்கள். இவற்றுக்கெல்லாம் எனது