பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 & நிலைபெற்ற நினைவுகள் தமிழ் மொழி பலவகைகளிலும் சிதைக்கப்படுகிறது. நல்ல தமிழ் பேசவும் எழுதவும் சிறுபிள்ளைப் பருவத்திலிருந்தே கற்றுத் தரப்பட வேண்டும். ஆனால் தற்காலத்தில் பள்ளிக்கூடங்களில் கூட தமிழைக் கெடுக்கத்தான் சொல்லித் தரப்படுகிறது. ஆரம்பகல்விப் பாடநூலில் தவறான சொற்களைச் சேர்த்திருக்கிறார்கள். டங்கா, டமாரம், டப்பி என்று கற்றுத் தரப்படுகிறது. தமிழ் இலக்கணத்தின்படி ‘ட’ என்ற எழுத்து மொழி முதலில் வராது. வரக்கூடாது. ஆனால் பள்ளி ஆசிரியர்களோ டங்கா, டமாரம், டப்பி என்று போதிக்கிறார்கள், பாடப்புத்தகத்தில் அவை அச்சிடப்பட்டிருக்கின்றன. இது பிழை. இப்படித் தவறு செய்கிறவர்களை “டாகினிப் பேய் தான் தண்டிக்கவேண்டும். தமிழ் இலக்கியத்தில் 'டாகினியை, இடாகினி' என்றுதான் குறிக்கப்பட்டுள்ளது. தவறுகள் செய்வோரை தண்டிக்கக்கூடிய பேய் அது. தமிழில் பிழையாக டங்கா, டமாரம், டப்பி என்ற தன்மையில் பேசுகிறவர்களையும் எழுதுகிறவர்களையும் டாகினிப் பேய் கவனிக்கட்டும் என்று சுவாரசியமாக உரையாற்றினார் சொல்லின் செல்வர். இவ்விதம் அரிய கருத்துக்கள் கொண்ட சிறப்புரையை அவர் ஒருமணி நேரத்துக்கும் அதிகமாகவே பேசி சபையோரின் செவிகளுக்கு விருந்து அளித்தார். நெல்லை வாலிபர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் சீரிய முறையில் தமிழ்ப்பணி புரியவேண்டும் என்றும் அவர் வழிவகுத்துக் கொடுத்தார். கடைவீதிகளில் உள்ள கடைகளின் பெயர்ப் பலகைகளில் எல்லாம் தமிழ்ப் பெயர்களை விட ஆங்கிலச் சொற்கள் கொண்ட பெயர்களே காணப்படுகின்றன. திருநெல்வேலிக் கடைவீதியில் ஒரு கடை ஆயத்த அணிகலன் அங்காடி என்று அழகுதமிழ்ச் சொற்களில் பெயர்வைத்திருக்கிறது. இது மகிழ்ச்சிக்கு உரியது. பல கடைகளில் எழுதிவைக்கப்பட்டுள்ள பெயர்ப்பலகைகளில் எழுத்துப் பிழைகள் மிகுந்து காணப்படுகின்றன. தமிழுக்கு ஊறு செய்யும் போக்குகள் இவை. இத்தகைய தவறுகள் திருத்தப்பட வேண்டும். நெல்லை வாலிபர் சங்க இளைஞர்கள் கடைக்காரர்களைக் கண்டு பேச வேண்டும். பிழைகளைத் திருத்தி எழுதும்படி கூறவேண்டும். தமிழ்ப் பெயர்கள் வைக்கும்படி கேட்டுக்கொள்ள வேண்டும். அதற்கு அவர்கள் இசையாவிட்டால், நம் இளைஞர்களே பெயின்ட்டும் பிரஷம் எடுத்துச் சென்று ஆங்கிலப் பெயர்களை அழிக்கவேண்டும்; சொற்பிழைகளைத்