பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் & 23 திருத்தி நல்ல முறையில் எழுத வேண்டும். இத்தகைய நற்பணிகளிலும் தமிழ்ப்பற்றுடைய வாலிபர்கள் ஈடுபடட்டும் என்று தமிழறிஞர் சேதுப்பிள்ளை உபதேசித்தார். ஆண்டுவிழா வெற்றிகரமாக நடந்து முடிந்த சில வாரங்களில் நான் சங்கத் தலைமைப் பொறுப்பை விட்டுவிட்டேன். 'இளந்தமிழன்’ இதழை சங்க வாலிபர்கள் தொடர்ந்து நடத்த விரும்பினால், அவர்கள் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்தேன். எங்களால் ஆகாது; நீங்கள் இதழை வைத்துக் கொள்ளுங்கள் என்று அவர்கள் சொல்லிவிட்டார்கள். நான் என் விருப்பத்தைப்போல் எழுதுவதற்கு இதய ஒலி இதழ் எனக்கென்று இருந்தது. அதன் பக்கங்கள் முழுவதையும் விதம்விதமான எழுத்துக்களால் நானே நிரப்பினேன். அதற்காக அநேக புனைப்பெயர்கள் சூட்டிக்கொண்டேன். வல்லிக்கண்ணன், ரா.சு.கிருஷ்ணசுவாமி என்ற பெயர்களோடு நையாண்டி பாரதி, கோரநாதன், சொக்கலிங்கம், சொனாமுனா, மிவாஸ்கி, பிள்ளையார் என்றெல்லாம் பல பெயர்கள் வைத்துக் கொண்டு எழுதினேன். ரா.பி.சேதுப்பிள்ளை ராஜவல்லிபுரம் ஊர்வாசிதான். எங்களுக்கு உறவினரும் கூட. எனினும் நான் அவரை எனது இருபத்தொன்றாவது வயதில் தான் முதல் முறையாகப் பார்த்தேன். அவர் ராஜவல்லிபுரத்தில் வசித்ததில்லை. அங்கு அவருக்கு வீடு இருந்தது. அது உபயோகிப்பாரற்றுப் பூட்டிக்கிடந்தது. அவர் சென்னையிலேயே வசித்தார். எப்போதாவது திருநெல்வேலிக்கு வந்தாலும், அங்கே சுடலைமாடன் கோயில் தெருவில் இருந்த மனைவி வீட்டிலும் மற்றும் உறவினர் வீட்டிலும் தங்கிவிட்டுப் போய் விடுவார். - சேதுப்பிள்ளையின் கம்ப இராமாயணக் கட்டுரைகளை நான் எனது மாணவப் பருவத்திலேயே படித்திருக்கிறேன். 'ஆனந்த போதினி” என்ற இலக்கிய மாசிகையில் அவை வெளிவந்தன. சென்னையிலிருந்து வீரபாகுப் பிள்ளை நடத்திய ஒற்றுமை’ இதழிலும் சேதுப்பிள்ளை கட்டுரைகள் பிரசுரமாயின. பள்ளி நாள்களில் பரிசுகள் வழங்கப்பட்டபோது, சேதுப்பிள்ளை எழுதிய சிறுபுத்தகங்கள் (தமிழ் நாட்டு நவமணிகள் என்று சிறந்த மகளிர் பற்றி எழுதப்பட்ட நூல் போன்றவை) எனக்கு அளிக்கப்பட்டிருந்தன.