பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ற்ற நினைவுகள் லையில், வி.எஸ்.காண்டேகர் எனும் மராத்தி நாவல்கள் தமிழில் அறிமுகமாயின. முதலில் ாயில் என்ற நாவல் புத்தகமாகவே வெளிவந்தது. : : శ్లే ரின் எழுத்தாற்றலும், கதை சொல்லும் முறையும் கதையின் பொருளும், காபூர் ரீயின் திறமையான தமிழாக்கமும் நாவலுக்கு நல்ல வரவேற்பையும் பாராட்டுதலையும் பெற்றுத் - - தொடர்ந்து காண்டேகரின் ‘அகம் எங்கே?' 'எரி நட்சத்திரம் ஆகிய நாவல்கள் வெளிவந்து வாசகர்களின் கவனிப்பையும் ஆதரவையும் பெற்றன. அடுத்து வந்த கருகிய மொட்டு பரபரப்பான கவனிப்பையும் விமர்சனங்களையும் திருமணம் மூலம் இணைகிற ஆண்கள் பெண்களின் இல்லற வாழ்க்கையின் குறைபாடுகள் பற்றி பொருந்தாத ஜோடிகளின் நவின் திருப்தியின்மை குறித்து அந்தஅந்தப் பாத்திரங்களே சொல்வதுபோல் எழுதப்பட்ட நாவல் ‘கருகிய மொட்டு'- சிறிது வெளிப்படையாக இல்லற உறவு பற்றிப் பேசுவது. காண்டேகர் அழகான நடையில் எழுதியிருப்பார். காபூரீயூனியின் தமிழாக்கம் அமைந்திருந்தது. காண்டேகர் நாவல்களுக்குத் தமிழ்நாட்டில் கிராக்கி’ ஏற்பட்டது. புத்தகங்கள் தொடர்ந்து வந்தன. பல பத்திரிகைகள் காண்டேகர் நாவலை தொடர்கதையாக வெளியிடுவதில் ஆர்வம் ட்டின. அனைத்தையும் காபூரீபூர். (காபூர். ரீநிவாசாச்சார்யா) மிழாக்கி உதவினார். அதனால் காண்டேகர், ရ္ဟိရ္ဟိ சிறப்பா மகாராஷ்டிரத்தில் பெற்ற ஆதரவையும் கவனிப்பையும் விட அதிகமான கவனிப்பையும் போற்றுதலையும் தமிழ்நாட்டில் பெற்றார். தமிழ் வாசக உலகில் பதினைந்து இருபது வருடங்கள் 'காண்டேகர் சீசன் நிலவியது. ாண்டேகர் பாணியில் நாவல்கள் எழுதுவதில் சில எழுத்தாளர்கள் உற்சாகம் காட்டினார்கள். காண்டேகர் நாவல்களும் சிறுகதைத் தொகுப்புகளும் எனக்குப் படிக்கக் கிடைத்தன. தி.க, சிவசங்கரனும் புதிய புத்தகங்கள் வாங்கிப் படிப்பதில் ஆர்வம் கொண்டிருந்தார். அவர் வாங்கும் புத்தகங்களை எங்களுக்குப் படிக்கத் தருவதை வழக்கமாகக் கொண்டார். மகாத்மா காந்தியின் நூல்கள், சுபாஷ் சந்திர போசின் இளைஞன் கனவு’, வ.ரா. கட்டுரைகளின் தொகுப்பு மழையும் புயலும்’ போன்ற நூல்கள் அவர் மூலம் கிடைத்தன.