பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 % நிலைபெற்ற நினைவுகள் 'ఖి ? بن عمي புத்தகங்கள் தோற்றம் கொண்டிருந்தன, அட்டையில் படங்கள் கிடையா. நூலின் பெயரும் ஆசிரியர் பெயரும், பெங்குவின் புக்ஸ் என்பதும் எடுப்பான எழுத்துக்களிலேயே அச்சிடப்பட்டிருக்கும். அதே ரீதியான அட்டை அமைப்புடன் வைகோவிந்தன் சக்தி புத்தகங்களை வெளியிட்டார். நல்ல மொழிபெயர்ப்புகள், தமிழில் சொந்தமாக எழுதப்பட்ட நூல்கள் எனப் பலவகையான நூல்களும் சக்தி காரியாலய வெளியீடுகளாக வந்தன, ஆரம்பத்தில் எட்டனா, பன்னிரண்டனா விலையில் புத்தகங்கள் வெளியிடப்பட்டன. போகப் போகக் காலத்தின் கட்டாயத்தால் விலைகளை அதிகரிக்க வேண்டியது அவசியமாயிற்று. அந்த நிலையிலும், பல வருடங்களுக்குப் பின்னர், வை. கோவிந்தன் மலிவு விலை நூல்களை துணிந்து வெளியிட்டு, புத்தகப் பிரசுரத் துறையில் ஒரு வழிவகுத்துக் கொடுத்தார். பாரதியார் கவிதைகளை ஒரு ரூபாய் விலையில் அச்சிட்டு விற்பனைக்கு அனுப்பினார். திருக்குறள் உரையுடன் தனிப்புத்தகமாக வந்தது. மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் ‘பிரதாப முதலியார் சரித்திரம் நாவலையும் “சுகுணசுந்தரியையும் ஒரே புத்தகமாக வெளியிட்டார். - இதிலும் அவர் புதுமை செய்திருந்தார். ‘பிரதாபமுதலியார் சரித்திரம் ஒருபுறம். அதே புத்தகத்தின் பின்பக்கத்திலிருந்து ‘சகுணசுந்தரி ஆரம்பமாகியிருந்தது. பிரதாபமுதலியார் சரித்திரம்’ படித்துமுடித்ததும், புத்தகத்தைத் திருப்பி மாற்றிப் பிடித்து 'சுகுண கந்தரி'யை வாசிக்க வேண்டும். கம்பராமாயணம் முழுவதையும், ஒவ்வொரு காண்டத்தையும் தனித்தனிப் புத்தகமாக, ஒன்றரை ரூபாய் விலையில் வெளியிட வைகோவிந்தன் திட்டமிட்டார். சுந்தரகாண்டம் மட்டும் முதலில் பிரசுரம் பெற்றது. இதர காண்டங்கள் வெளியிடப் பெறவில்லை. வைகோவிந்தனின் துணிச்சலான மலிவு விலை வெளியீட்டு முயற்சியையும், அதற்கு நாடுநெடுகிலும் இருந்த வரவேற்பையும் கவனித்த இதர பல புத்தகவெளியீட்டாளர்களும், பலவகையான நூல்களையும் மலிவு விலைப் பதிப்புகளாகப் பிரசுரம் செய்ய முற்பட்டார்கள். பஞ்சதந்திரக் கதைகள், கதைக்கடல், விக்கிரமாதித்தன் கதைகள், மதனகாமராஜன் கதைகள், நடேச சாஸ்திரியின் ‘தீனதயாளன்’ நாவல் போன்ற பலரகமான புத்தகங்களும் குறைந்த விலையில் வெளியிடப்பட்டன.