பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் x 31 பொதுவாகவே, பதிப்பகத்துறையில் ஈடுபட்ட செட்டியார்கள் பலரும் வைகோவிந்தனை தங்கள் முன்னோடியாகவும், வழிகாட்டியாகவும் கொண்டு செயல்பட்டார்கள். புத்தகங்கள் பதிப்பித்து வெளியிடுவதில் சாதனைகள் புரிந்த வை. கோவிந்தன் சக்தி' என்ற தனிரகமான பத்திரிகையையும் நடத்தி, இதழியல் துறையில் தனியிடம் பெற்றார். சக்தி மாத இதழ் முதலில் ஒரு வருடம் அகல சைசில், டைம்’ பத்திரிகை மாதிரியே அட்டை அமைப்புக் கொண்டு வெளிவந்தது. அப்போது சுவாமி கத்தானந்த பாரதியார் அதைப் பொறுப்புடன் கவனித்து வந்தார். அவருடைய படைப்புகள் அதில் மிகுதியாக வந்தன. பிற்காலத்தில் அவருக்குப்புகழ் பெற்றுத்தந்த 'பாரத சக்தி மகாகாவியம்’ ஆரம்பப் பகுதி தொடர் கவிதையாக சக்தி'யில் வெளிவந்தது. ஒரு வருடத்துக்குப் பிறகு தி.ஜ. ரங்கநாதன் (தி.ஜர) சக்தி'யின் ஆசிரியர் பொறுப்பேற்று, பெரும் மாறுதல்களைப் புகுத்தினார். பத்திரிகையின் வடிவம் மாற்றப்பட்டது. கச்சிதமான புத்தக வடிவத்தில், கனத்த அட்டையுடன், வசீகர வர்ணப்பொலிவு பெற்று சக்தி புதுமலர்ச்சி பெற்றது. அட்டையில் பிரபலஸ்தர் ஒருவரின் படத்தை அச்சிட்டு, அவரைப்பேட்டி கண்டு, சுவாரசியமான கட்டுரையாக எழுதினார் தி.ஜ.ர. இந்த விதமாக கவிஞர் பாரதிதாசன், வெ. சாமிநாத சர்மா, திருவி. கல்யாண சுந்தர முதலியார் போன்றோர் பற்றி வாசகர்கள் அதிகம் தெரிந்து கொள்ளமுடிந்தது. உள்ளடக்கத்திலும் பல மாறுதல்கள் செய்தார் தி.ஜ.ர. சுயமான கட்டுரைகள் கதைகளோடு மொழிபெயர்ப்பு விஷயங்களுக்கு அதிக இடம் ஒதுக்கப்பட்டது டைஜஸ்ட்” பாணிப் பத்திரிகையாக சக்தி மறுமலர்ச்சி பெற்று விளங்கியது. ‘சக்தி'யிலும் எனது எழுத்து பிரசுரம் பெற்றது, “சக்தி'யை திருநெல்வேலி வாசகர்களிடம் அதிகம் பரப்புகிற முயற்சியில் நானும் என் சகோதரர்களும் ஈடுபட்டோம். - ‘சக்தி இதழுக்கு திருநெல்வேலியில் விற்பனையாளர் யாரும் இல்லை. சக்தி”யை மாதம் தோறும் பத்துப்பிரதிகள் எனக்கு அனுப்பிவைத்தால், அவற்றை விற்று உடனடியாக உரிய பணத்தை அனுப்பி வைக்க இயலும். முன்பணமாக (ஏஜன்சி டிப்பாசிட்) எதுவும் கட்ட இயலாது. என்னை நம்பி இதழ் அனுப்பினால், இந்த வட்டாரத்தில், சக்தி பத்திரிகை பரவுவதற்கு உதவ முடியும் என்று சக்தி காரியாலயத்துக்கு எழுதினேன்.