பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சந்தோஷமான தன்மையிலேயே நாள்கள் போயின.நண்பர்கள் என்று திக சிவசங்கரனும் திய திருஞானசம்பந்தமும் திருவனந்தபுரம் ாஸ் சிதம்பரமும் தினந்தோறும் மாலையில் வந்து பேசி மகிழ்ந்தார்கள், கல்லூரி சமாச்சாரங்கள், படித்த புத்தகங்கள், மாணவர்களின் போக்குகள், மனிதரின் விந்தைக் குணங்கள், சினிமாப் படங்கள் பற்றியெல்லாம் சுவையாக உரையாடினார்கள். శ్రీ சினிமா மக்களின் ஆத படங்கள், புதிய புதிய நடிக சக்திகளாக விளங்குவதற்குக் காலம் உதவியது. ரவைப் பெற்று வளர்ந்து வந்தது. புதிய ர்கள், நடிகைகள் மக்களை வசீகரிக்கும் தமிழ்ப்படங்களில் பாடல்கள் அதிக முக்கியத்துவம் பெற்றிருந்தன. ஒரே படத்தில் முப்பது நாற்பது பாடல்கள் ஒலித்தன. அவையே முக்கியமாக விளம்பரப்படுத்தப்பட்டன. இனிய குரலில் கவர்ச்சியாகப் பாடத் தெரிந்தவர்கள் பெரிய நடிகரெனப் பெயர் பெறுவது சாத்தியமாகியிருந்தது. எம்.கே.தியாகராஜ பாகவதர் ஒளி மிகுந்த நட்சத்திர நடிகராக வளர்ந்து கொண்டிருந்தார். பாகவதர் நடித்த சிந்தாமணி நீண்ட நாட்கள் ஓடின. நடிகைகள் மக்களை மயக்கும் கவர்ச்சி சக்திக்களாக விளங்கலாயினர். ‘சிந்தாமணி'யில் நடித்த அஸ்வத்தம்மா எனும் கன்னடப் பெண் தமிழ் ரசிகர்கள் பலரைப் பித்தர்களாக்கிக் கொண்டிருந்தாள். அஸ்வத்தம்மா பித்துப் பிடித்த ரசிகர் ஒருவர் இலங்கையிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்து அந்த நடிகையைப் பார்க்க வேண்டும் என்று அலைந்தார். அஸ்வத்தம்மாவின் பெரிய காந்தக் கண்கள் இரவும் பகலும் பலரைப் புலம்பச் செய்தன. தவமணி தேவி துணிச்சலுடன் நீச்சல் உடையில் வனராஜ டார்சான்’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துக் கவர்ச்சி நடிகை எனப் பெயர்பெற்றார். டைரக்டர் கே. சுப்பிரமணியம் அறிமுகம் செய்த டி.ஆர் ராஜகுமாரி ஒளிவீசும் நட்சத்திரமாக வளரலானாா.