பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4{ ~$ 盗 நிலைபெற்ற நினைவுகள் மென்றபடி நடந்தேன். ரோடு ஒரத்துப் பள்ளங்களில் கட்டிக்கிடந்த மழைநீர் குடிப்பதற்கு ஏற்றதாக உதவியது. எந்த இடத்திலும் உட்காரவில்லை. வேகமாக இல்லாமலும் மெதுவாக இன்றியும் நிதானநடையிலேயே தூரத்தைக் கடந்து கொண்டிருந்தேன். மாலை 6 மணி அளவில் கோவில்பட்டி அடைந்து விட்டேன். 35 மைல் தூரம் நடந்திருந்தேன். அன்று தேதி மே 25, ரயில் நிலையம் சேர்ந்தேன். கோவில்பட்டி ஸ்டேஷன் அன்று சாதாரணக் கட்டிடமாகத் தான் இருந்தது. பிற்காலத்தில் மிகப்பெரியதாக அதிகக் கட்டுமானங்களுடன், நாகரிகத் தோற்றம் பெற்றுவிட்டது. அன்று எனக்குப் புகலிடம் அளித்த நிலையம். பரபரப்பு இல்லாதது, அடக்கமான கட்டிட அமைப்புக் கொண்டதாகும். அதன் தாழ்வாரத்தின் ஒரு மூலை படுப்பதற்கு வசதியான இடமாக எனக்குத் தோன்றியது. முதலில் ஒய்வாக உட்கார்ந்தேன். அந்தி மயங்கி இரவு படரும் நேரம் என் அருகே வந்து யாரும்; நீ யார், ஏன் உட்கார்ந்திருக்கிறே? என்று கேட்கவில்லை. எத்தனை நேரம் உட்கார்ந்திருப்பதுபடுக்கலாமே என்று கல்தரையில் படுத்தேன். ஆழ்ந்த தூக்கம் என்னை ஆட்கொண்டது. திடீரென்று எவரோ அதட்டிய குரலில் என்னை எழுப்பியதை உணர முடிந்தது. ஏ, எழுந்திரு இங்கே ஏன் படுத்திருக்கே என்று அதிகாரக் குரல் உலுக்கியது. எழுந்து உட்கார்ந்தேன். போலீஸ்காரர் குரல் டார்ச்லைட்டால் வெளிச்சப்படுத்தியவாறு நின்றார். அவர் அருகில் இன்னொருவரும் நின்றார். எங்கே இருந்து வாறே? என்று போலீஸ் விசாரித்தார். இப்போது அவர் குரலில் அதட்டல் இல்லை. சகஜமாகத்தான் கேட்டார். எனது அப்பாவித் தோற்றம் அவர் மனசைத் தொட்டிருக்க வேண்டும். நான் திருநெல்வேலியிலிருந்து என்று பதிலளித்தேன். இந்த பத்து மணி ட்ரெயின்லே திருநெல்வேலியிலிருந்து அதிகமான பேர்கள் வந்து இறங்கி, ஸ்டேஷனிலே இருக்கிறாங்க என்று அவர், கூட நின்றவரிடம் சொன்னார், நீ எங்கே போகனும் என்று என்னிடம் கேட்டார். . சாத்துர் போகணும் என்றேன்.