பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 & நிலைபெற்ற நினைவுகள் போறியா? எவ்வளவு ரூபாய் வேண்டும்?' என்று கோபால் கேட்டார். மூன்று ரூபாய் போதும் என்றேன். அதை அவர் தந்தார். அவரிடம் விடைபெற்றுக் கிளம்பினேன். அப்போது யுத்த காலம் ரயில் வண்டிகள் குறைவாகவே ஓடின. காரைக்குடி போவதற்கான ரயிலின் நேரத்தை முந்திய தினம் கவனித்திருந்தேன். மதியம் பன்னிரண்டு மணிக்கு மேல் தான் "ட்ரெயின் இருந்தது. மதுரை ஸ்டேஷனில் சும்மா காத்திருப்பதை விட, அடுத்த ஸ்டேஷனுக்குப் போய் ரயிலில் ஏறலாமே என்று எண்ணி நான் மதுரை நிலையத்துக்குப் போகாமல், அடுத்த ஸ்டேஷனுக்கு நடந்தேன். அப்படியும் ரயில் வருவதற்கு அதிக நேரம் இருந்தது. அங்கே பயணிகள் மூன்று நான்குபேர்தான் இருந்தார்கள் வண்டி வந்ததும் வசதியாக ஏற முடிந்தது. பயணம் சவுகரியமாக அமைந்தது. காரைக்குடி சேரும்போது இரவு ஆகியிருந்தது. ஊருக்குள் போய் இரவு நேரத்தில் இந்திரா அலுவலகத்தைத் தேடிக் கண்டுபிடிப்பது சிரமம்; அவ்வேளையில் ஆபீசில் யார் இருக்கப் போகிறார்கள் என்று எண்ணி, இரவை ரயில் நிலையத்திலேயே போக்கினேன். அதிகாலையில் எழுந்து ஊருக்குள் சென்று 'இந்திரா அலுவலகத்தைக் கண்டேன். இரவில் யாரோ அங்கேயே தங்கியிருந்திருக்கிறார்கள். அந்நேரத்தில் தான் அவர்கள் விழித்திருக்க வேண்டும். இரண்டு பேர் எழுந்து நின்று படுக்கையை உதறிக்கொண்டிருந்தார்கள். இன்னும் நேரம் போக வேண்டும் என்ற நினைப்புடன் நான் வெளியே வீதியில் கற்றி வேடிக்கை பார்க்கலானேன். பின்னர் மெதுவாக அந்த அலுவலகத்துக்குப் போனேன். 'இந்திரா மாத இதழின் வெளியீட்டாளர், உரிமையாளர் பழனியப்ப செட்டியார் என்று ஒருவர். ப.நீலகண்டன் ஆசிரியப் பொறுப்பில் இருந்தார். பிற்காலத்தில் நாடக ஆசிரியராகப் பொறுப்பேற்று, பிறகு சினிமா உலகில் பிரவேசித்து, திரைப்பட இயக்குநராக வளர்ச்சி பெற்ற அதே நீலகண்டன் தான். அப்போது சாதாரண நிலையில் இருந்தார். கோ.த. சண்முகசுந்தரம் உதவி ஆசிரியர். பத்திரிகை விற்பனையை அதிகப்படுத்தும் நோக்கத்துடன், விற்பனையாளர்களைக் கண்டு பேசி உரிய ஏற்பாடுகள்