பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 நிலைபெற்ற நினைவுகள் என்று ராணுவத்தில் சேர்ந்தார்கள். ராணுவ வீரர்களின் நடமாட்டம் பெரிய நகரங்களில் சகஜமாகக் காணப்பட்டது. ராணுவச் செலவுகளுக்காக யுத்த நிதி' சேகரித்துத் தரவேண்டும் என்று பிரிட்டிஷ் அரசாங்கம் கெடுபிடி பண்ணியது. வீடுகளில் இரவு நேரத்தில் அதிகநேரம் மின்விளக்குகளை எரியவிடக்கூடாது; எரிகிற விளக்குகள் அதிக ஒளிபெற்றனவாக இருக்கக்கூடாது என்று கட்டுப்பாடுகள், தெருவிளக்குகளின் பல்புகளில் தார் பூசி வெளிச்சம் மட்டுப்படுத்தப்பட்டது. பஸ்கள், கார்களின் முகப்பு விளக்குகளில்கூட கறுப்பு வர்ணம்பூசி வெளிச்சத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பன போன்ற அடக்குமுறைகள் அமுல் படுத்தப்பட்டன. யுத்தகாலம் பணக்கஷ்டம் என்று பேசப்பட்டு வந்தாலும், புதிய பத்திரிகைகள் தோன்றிக்கொண்டுதான் இருந்தன. 'ஆனந்த விகடன் பத்திரிகையில் பணிபுரிந்து, அதன் வளர்ச்சிக்குப் பெரிதும் துணைபுரிந்து வந்த 'கல்கி' ரா.கிருஷ்ணமூர்த்தி விகடனிலிருந்து பிரிந்து சென்றார். சொந்த முயற்சியாக 'கல்கி' என்ற பெயரிலேயே ஒரு பத்திரிகை ஆரம்பித்தார். அதன் பிறகு பத்திரிகை தொடங்கி நடத்த முற்பட்ட எழுத்தாளர்கள் சிலர் அவரவர் புனைப்பெயரைச் சூட்டி இதழ் ஆரம்பிப்பது ஒரு வழக்கமாகிவிட்டது. சேலத்தில் வேல்சாமி கவிராயர் என்பவர் 'சண்டமாருதம்’ என்ற பெயரில் ஒரு இதழைத் தொடங்கினார். சேலம் மாடர்ன் தியேட்டர் தயாரித்த திரைப்படங்களுக்குப் பாடல்கள் எழுதுவார் அவர், பரவால்லே ரகம்’ என்ற தன்மையில் அவர் பத்திரிகையை நடத்திக் கொண்டிருந்தார். திரைப்படங்களுக்குப் பாடல்களும் வசனமும் எழுத முற்பட்டிருந்த கவிஞர் பாரதிதாசனுடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டது. இதழ் தோறும் பாரதிதாசன் எழுதிய புதிய கவிதை வ்ெளிவரலாயிற்று. அது சண்டமாருதம்' இதழுக்குப் பெருமை சேர்த்தது. எனது கதைகள் கட்டுரைகளும் அதில் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன. வெளிநாடுகளில் தங்கி அனுபவம் பெற்ற சி.பா.ஆதித்தன் 'பார்-அட்லா'தமிழகம் வந்து சேர்ந்தார். (அவரை ஆதித்தனார் என்று குறிப்பிடும். வழக்கம் பிற்காலத்தில் ஏற்பட்டது.) அவர் பத்திரிகைத்துறையில் ஈடுபடத்திட்டமிட்டார். ‘தமிழ் ராஜ்யம்' பற்றிய கனவுகளை வளர்த்து வந்த அவர் 'தமிழ் ராஜ்யக் கட்சி