பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் & 55 தொடங்கினார். கட்சியை வளர்ப்பதற்குப் பத்திரிகைகள் தேவை என்று கருதிய அவர் முதலில் தமிழன்’ வாரப்பத்திரிகையை ஆரம்பித்தார். தொடர்ந்து தினத்தந்தி என்ற பெயரில் நாளிதழைத் தொடங்கினார். தமிழன்’ இதழ் புதுமைகள் பண்ணுவதில் மிகுந்த உற்சாகம் காட்டியது. வாரம் தோறும் இதழின் அட்டையில் சினிமா நடிகையர் அல்லது புகழ்பெற்ற கலைஉலக அழகியர் அல்லது முக்கிய பிரபலஸ்தர்கள் படங்களை தமிழன்’ வெளியிடவில்லை. சமூகத்தில் உள்ள சாதாரணப் பெண்மணிகளைப் படம்பிடித்து அட்டையில் வெளியிட்டது. உள்ளே நி.சி.நி. (நினைத்தாலே சிரிப்பூட்டும் நிகழ்ச்சி”, ம.மு.ச. (மறக்க முடியாத சம்பவம்) என்றெல்லாம் சிறுசிறு பகுதிகள். ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனி ஆசிரியர் இருப்பது போல, நி.சி.ச, ஆசிரியர், ம.மு.சஆசிரியர் கேள்வி-பதில் ஆசிரியர் என்ற அறிவிப்புகள். கோதசண்முகசுந்தரம் 'இந்திரா அலுவலகத்திலிருந்து விலகி “தமிழன்’ இதழில் சேர்ந்திருந்தார். மேதாவி’ என்ற பெயரில் அவர் பரபரப்பு ஏற்படுத்திக் கொண்டிருந்தார். 'தமிழன்’ மதுரையிலிருந்து வெளிவந்தது. மதுரையிலிருந்து வேறு சில புதிய பத்திரிகைகளும் வரலாயின. இதனால் எல்லாம் என் மனம் மறுபடியும் குறுகுறுத்தது. புதிய பத்திரிகை எதிலாவது இடம் கிடைக்குமா என முயன்று பார்க்கலாமே என்று ஆசைப்பட்டேன். வேல்சாமிக் கவி சேலம் மாடர்ன் தியேட்டர்சின் ஆதரவோடு சண்டமாருதம் இதழை மேலும் சிறப்பாகக் கொண்டுவர இருப்பதாக அறிவித்திருந்தார். அந்தப் பத்திரிகையில் எனக்கு இடம் கிடைத்தால் எனது வளர்ச்சிக்கும் பத்திரிகையின் வளர்ச்சிக்கும் உபயோகமாக இருக்கும் என்று எண்ணினேன். எனவே மீண்டும் வெளிஉலகப் பயணம் தொடங்கினேன். இம்முறை வீட்டில் அனைவரின் அனுமதியோடு, செலவுக்குத் தேவையான பணத்துடன் தான் புறப்பட்டேன். மதுரை சேர்ந்தேன், ரயிலில் பயணம் செய்துதான். மதுரையில் ரா.ஆறுமுகம், ரா.வேங்கடாசலம் என்று இரண்டு எழுத்த்ாளர்கள் பல பத்திரிகைகளிலும் எழுதி கவனிப்புப் பெற்றிருந்தார்கள். ரா. ஆறுமுகம் ஆண்பெண் செக்ஸ் உறவுகளை விவரிக்கும் ரசமான கதைகள் எழுதுவதில் பெயர் பெற்றவர். ராவேங்கடாசலம் சாதாரணமாக எழுதக்கூடியவர். காலப்போக்கில்