பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் & 57 கோ.த.ச. தான் இந்த இருக்கையில் இருந்து இன்னொன்றுக்கும், அங்கிருந்து அடுத்ததற்கும் என்று, தேவைப்பட்ட குறிப்புகள் காகிதங்களை எடுப்பதற்காகவும், ஃபைலை எடுத்துப் பார்ப்பதற்காகவும் போய் வந்து கொண்டிருந்தார். மேதாவி. மேல்தாவி குரங்கு என்று ஒருவாரம் அவர் தன் பெயருக்கு விளக்கம் கொடுத்திருந்தார். இப்போது அவர் சிரித்துக் கொண்டே, ‘நான் மேதாவி-மேல் தாவி என்பது சரிதானே? அங்கும் இங்கும், இந்த மேசைக்கும் அந்த மேசைக்கும் என்று தாவித் தாவி வேலை செய்சிறேன் அல்லவா?’ என்று தமாஷ் பண்ணினார். - ‘எல்லாப் பிரிவுகளுக்கும் தனியே ஆட்கள் நியமிக்க வில்லையா? என்று கேட்டேன். 'இன்னும் சரியாக ஆட்கள் சேர்க்கவில்லை. இப்போதைக்கு எல்லாவற்றையும் நான் தான் கவனித்துக் கொள்கிறேன் என்றார் கோ.த.ச. 'எனக்கு இங்கே வேலை கிடைக்குமா? 'இப்போ புதுசா ஆட்கள் சேர்க்கிறதாக இல்லை. மேலும் உங்களுக்கு இங்கே சரிப்பட்டு வராது என்று நண்பர் சொன்னார். ஆசிரியர் ஆதித்தனைப் பார்க்கலாமா? ‘ஓ, தாராளமா என்னோடு வாங்க என்று அவர் என்னை ஆதித்தன் இருந்த இடத்துக்கு அழைத்துச் சென்றார். அவரிடம் என்னைப் பற்றிக் கூறிவிட்டுத் தனது இடத்துக்குப் போய்விட்டார். ஆதித்தன் என்னைப் பற்றி விசாரித்தார். திருநெல்வேலியில் தமிழன் இதழுக்கு எப்படி வரவேற்பு இருக்கிறது என்று கேட்டார். தமிழ் ராஜ்யம். தமிழ் ராஜ்யக் கட்சி பற்றிச் சிறிது விவரித்தார். அது சம்பந்தமான துண்டுப் பிரசுரங்களை எனக்குத் தருமாறு ஒருவருக்கு உத்தரவிட்டார். அவை கிடைத்தன. பத்திரிகையில் எனக்கு ஒரு வேலை வேண்டும் என்பது பற்றி நான் அவரிடம் எதுவும் கூறவில்லை. சிறிது நேரத்தில் விடைபெற்றுக் கொண்டு வெளியேறினேன். மதுரையைச் சிறிது சுற்றிப் பார்த்தேன். ரயில் நிலையம் போனேன். திருச்சிராப்பள்ளிக்கு ரயில் வண்டி எப்போது போகும் என்று பார்த்தேன். டிக்கெட் வாங்கிக் கொண்டு ரயிலில் பயணமானேன்.