பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிலைபெற்ற நினைவுகள் உலகம் இனியது. வளங்களும் வனப்புகளும் நிறைந்தது. இயற்கையின் வளங்கள் மிகுதியானவை. இவற்றிடையே மனிதராகப் பிறந்திருப்பது ஒரு பெரும் பேறுநற்பேறு ஆகும். வாழ்க்கை இனியது, உயர்ந்தது, மாண்பு மிக்கது. பூமியில் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒருமுறைதான் வாழ்க்கை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அதன் நிச்சயமான முடிவாக மரணம் காத்திருக்கிறது. மனிதருக்குக் கிடைத்திருக்கிற வாழ்க்கையை பெரும்பாலோர் சாரமற்றதாய், அர்த்தமற்றதாய், வீணானதாய் ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள். வாழ்க்கையில் எதுவுமே செய்யாமல் வெற்றர்களாய்த் திரிகிறவர்களும், எப்படி எப்படியோ விரயம் செய்பவர்களும், வெறுக்கிறவர்களும் வீணடிப்பவர்களும் மிக அதிகமாகவே காணப்படுகிறார்கள். வாழ்க்கை நன்று. பொருள் பொதிந்தது. வாழ்க்கை பொருளற்றது, அர்த்தமற்றது; செய்ததையே செய்து கொண்டு, ஒருநாளைப் போல மறுநாள் என்று இயந்திர ரீதியாக அமைந்துள்ள இந்த வாழ்க்கையில் என்ன இருக்கிறது என்று எண்ணுகிறவர்களும் பேசுகிறவர்களும் பலப்பலர் உளர். நமக்குக் கிடைத்திருக்கிற வாழ்க்கையை அர்த்தம் உள்ள தாக்குவதும், நாம் வாழ்கிற காலத்தைப் பொருள் உடையதாக ஆக்கிக் கொள்வதும் நம் கையில்தான் இருக்கிறது. நாம் நமது வாழ்க்கையை அர்த்தம் கொண்டதாகவும் பொருள் பொதிந்ததாகவும் ஆக்கிக் கொள்ள வேண்டும். அதற்குத் தேவைப்படுகிற ஆற்றல் நம்மிடமே, நமக்குள்ளேயே இருக்கிறது. நமக்கு நாமே துணை எனக் கொண்டு, நம்முடைய வாழ்க்கையை பயனுள்ள முறையில் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். ஆனால், சமூகத்தில் ஒவ்வொருவருடைய வாழ்க்கையையும் மற்றவர்கள் அமைத்துக் கொடுப்பதே இயல்பாக இருக்கிறது.