பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் & 63 நிகழ்ந்திருந்தன. காரைக்குடிக்கு அருகில் உள்ள பள்ளத்துர் ரயில் நிலையம் தீயிட்டு எரிக்கப்பட்டு முற்றிலும் சிதைவுண்டது. இச்செய்திகளை நான் பத்திரிகைகளில் படித்திருந்தேன். ஜனவரி மாதப் பயணத்தின்போது, அத்தகைய அழிபாடுகளின் சொச்சங்களைக் காணமுடிந்தது. முதல் முறை சென்றபோது பசுமையாய் குளுமையாய் காட்சி தந்த சில இடங்கள் இப்போது கருகிச் சிதைந்து காணப்பட்டன. அழகான சூழ்நிலையில் அமைதியாக நின்ற சிறிய கட்டிடம் பள்ளத்துர் ரயில் நிலையம். இம்முறை, அந்த இடத்தில் கருகிச் சரிந்த கூரையும், இடிந்து தகர்ந்த - கரி படிந்த சுவர்களும், கட்டை மண்ணும் குட்டிச் சுவருமாய் என்பார்களே அத்தன்மையில், கண்களை உறுத்தும் காட்சிகளாக நின்றன. என் மனசிலும் உறுத்தல் ஏற்படுத்தியது பாழ்பட்ட அந்தத் தோற்றம். புதுக்கோட்டையில் ராசி, சிதம்பரம் மகிழ்ச்சியோடு என்னை வரவேற்றார். செல்வந்தர் வீட்டு இளைஞர் என்பது அவருடைய நடை உடை பாவனைகளில் புலப்பட்டது. தனவைசிய இளைஞர்கள் பத்திரிகைப் பிரசுரத்திலும், புத்தக வெளியீட்டிலும் ஆர்வம் காட்டத் தொடங்கியிருந்த காலம் அது. சிதம்பரம் இனிய கனவுகள் வளர்த்து வந்தார். 'திருமக சிறப்பான இதழாக வளர்க்க வேண்டும். பேர் சொல்லக்கூ. பத்திரிகையாக திருமகள் விளங்க வேண்டும். இராம. மருதப். இப்போது ஆசிரியராக இருக்கிறார். அவரும் இருக்கட்டும். அவ சாதாரணமானவர். நீங்கள் உங்கள் திறமையை எல்லாம் காட்டி, திருமகளை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செலுத்த வேண்டும்’ என்று அவர் என்னிடம் கூறினார். இந்த மாடியிலேயே தங்கிக் கொள்ளலாம்: சாப்பாட்டுக்கு பக்கத்தில் ஒரு ஒட்டல் இருக்கு அதில் ஏற்பாடு செய்கிறேன் என்றும் சொன்னார். - அந்த இடம் நீளமும் விசாலமுமான ஒரு மாடி அறை. மேஜைகள் நாற்காலிகள் பெஞ்சுகள் அலமாரிகள் எல்லாம் மிகுதியாகவே இருந்தன. கீழ ராஜ வீதியில் இருந்த ஒரு பெரிய கட்டிடத்தின் வசதியான மாடி அது. மறுநாள் இராம. மருதப்பர் வந்தார். பள்ளி ஆசிரியர் போல் தோற்றம் பெற்றிருந்தார். திடீரென அங்கு முளைத்திருந்த என்னை வியப்புடன் பார்த்தார். என்னை நானே அறிமுகம் செய்து கொண்டேன். மகிழ்ச்சி காட்டினார் அவர் ‘சரி, இருங்க. எனக்கு நல்ல துணையாக இருக்கும் என்றார்.