பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் & 65 கறுவார்கள். வயது குறைந்த பெண்களைக் கூட சின்ன ஆச்சி’ என மரியாதையாக் குறிப்பிடுவார்கள்; அழைப்பார்கள். வந்தவரிடம் “எதற்காக?' என்று கேட்டேன். செட்டியார் விட்டில் எவரையும் நான் அதுவரை பார்த்ததில்லை, கையோட கட்டிவரச் சொன்னாக’ என்று அவர் அவசரப்படுத்தினார். அவரோடு நான் செட்டியார் வீட்டுக்குப் போனேன். ஒர் இளம் பெண், வாயில் வெற்றிலையை அதிகமாக ஒதுக்கியபடி, அமைதியின்றி அறையில் அப்படியும் இப்படியும் நடந்து கொண்டிருந்தாள். வசதிகள் படைத்த பெரிய இடத்துப்பெண் என்ற மிடுக்குடன் அவள் தோற்றம் காட்டினாள். என்னைக் கண்டதுமே உங்க செட்டியாரைத் தேடி யார் வந்தது? என்று கேட்டாள். . “யாரும் வரவியே என்றேன். 'பொய் சொல்ல வேண்டாம். கோகர்ணத்துக்காரி அங்கே வரலே? "யாரும் வரலே செட்டியார் தான் வந்தார். என்னோட சிறிது பேசிக் கொண்டிருந்தார்’ என்று சொன்னேன். 'உங்க செட்டியாரை பாதுகாக்கனும்கிறதுக்காக மூடி மறைக்க வேண்டாம். செட்டியார் கூட ஒரு பொம்பிளை வரலே? 'ஒருத்தரும் வரலே, செட்டியார் மட்டும் தான் வந்தார்.’ ‘வெளியே நின்றாளா? "அது எனக்குத் தெரியாது. நல்ல இருட்டு, வெளியே யாரும் நின்றால் கூடத் தெரியாது’ என்று நான் அறிந்ததைச் சொன்னேன். 'உம்ம செட்டியாரைத் தேடி பொம்பிளைக வருவாக அப்படி யாராவது வந்தா எனக்குத் தெரியப்படுத்தணும். இப்ப நீங்க போகலாம்’ என்று என்னை அனுப்பிவைத்தாள். இந்த குறுக்கு விசாரணை எனக்கு சில உண்மைகளைப் புரிய வைத்தது. கண்ணகி, கோவலன், மாதவி விவகாரம் போலிருக்கு. செட்டியார் மீது மனைவிக்கு நம்பிக்கையில்லை. அவர் தமது ஆசைநாயகியை ஆபீசில் சந்திக்கிறார் என்ற சந்தேகம் அம்மாளுக்கு. அதனால்தான் இந்த விசாரிப்பு. புதுக்கோட்டைக்கு அருகில் உள்ள கோகர்ணத்தில் தாசிகள் அதிகம் என்று மருதப்பர் பேச்சோடு பேச்சாகச் சொல்லி வைத்தது என் நினைவுக்கு வந்தது. அந்த வகையில் பிரசித்தமான அந்த