பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 & நிலைபெற்ற நினைவுகள் 'சமயம் வருகிறபோது நானே உங்களை சினிமா உலகம் பத்திரிகைக்கு அழைத்துக் கொள்வேன்’ என்று முன்னர் கூறியிருந்த ஆசிரியர் பி.எஸ். செட்டியார் என் பெயருக்குத் திருநெல்வேலிக்குக் கடிதம் எழுதியிருந்தார். அதை என் அண்ணா புதுக்கோட்டைக்கு அனுப்பி வைத்தார். "சினிமா உலகம் பணிகளில் எனக்கு உதவியாக இருந்த ஜீவன் என்ற நண்பர் விலகிக் கொண்டார். நீங்கள் உடனே புறப்பட்டு வந்தால் சினிமா உலகத்துக்கு உதவியாக இருக்கும் என்று பி.எஸ். செட்டியார் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தை நான் மருதப்பரிடம் காட்டினேன். நீங்கள் இதை ஏற்றுக் கொள்வது தான் நல்லது. இங்குள்ள நிலைமைகள் உங்களுக்கே தெரியும். திருமகள் பிப்ரவரி இதழ் எப்ப தயாராகி என்றைக்கு வெளிவரும் என்றே தெரியவில்லை. ஒவ்வொரு மாதமும் இதே நிலைமையும் சிரமங்களும் தான் இருக்கும். அதனாலே நீங்கள் பி.எஸ். செட்டியார் அழைப்பை ஏற்றுக் கோயம்புத்துர் போங்கள்’ என்று அவர் யோசனை கூறினார். - அதுதான் சரி என்று எனக்கும் பட்டது. ஆகவே, ராசி. சிதம்பரத்திடம் பி.எஸ். செட்டியார் கடிதத்தைக் காட்டி, நான் கோயம்புத்துரர் போகிறேன் என்று தெரிவித்தேன். போகப் போகிறீர்களா என்று வருத்தத்துடன் கேட்டார் அவர் 'இப்ப கொஞ்சம் சிரமம்தான். இன்னும் சில மாதங்களில் நிலைமை சரிப்பட்டுவிடும். திருமகளை நல்ல முறையில் கொண்டு வரலாம். இப்ப நீங்க கோவை போவதும் நல்லதுதான். நிலைமைகள் சீரானபின் நான் உங்களை அழைத்துக் கொள்கிறேன்’ என்றார். செலவுக்குப் பணம் தந்து வழிஅனுப்பி வைத்தார். நல்ல மனிதர் தான். நம்பிக்கையோடு கனவுகள் வளர்த்தார் அவர். ஆயினும் அவரது கனவுகள் மெய்ப்பட வழிபிறக்கவேயில்லை. மார்ச் இறுதியில் பிப்ரவரி இதழ் திருமகள் வந்தது. அதன்பிறகு ஒரிரு இதழ்களே பிரசுரம் பெற்றன. இதழ் வெளிவரக்கூடிய நிலைமை இல்லை எனத் தெரிந்ததும், இராம. மருதப்பர் கதர்க்கடையில் வேலைக்குச் சேர்ந்துவிட்டார். என்ற தகவல் எனக்குக் கிடைத்தது. மனிதர்கள் ஆசைக் கனவுகள் வளர்த்துச் செயல்பட முனைவதும், காலம் அவற்றைச் சிதைத்து விடுவதும் வாழ்வில் நடந்தவாறே இருக்கின்றன. $ .& శ్శ ళ 4× 敦