பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 5 - 1943 ஜனவரி ஆரம்பத்தில் நான் புதுக்கோட்டை ‘திருமகள் அலுவலகம் வந்து சேர்ந்தேன். பிப்ரவரி இறுதியில் அங்கிருந்து நான் புறப்பட்டுச் செல்ல வேண்டியதாயிற்று. அங்கே நான் தங்கியிருந்த சுமார் இரண்டு மாதங்களில் திருமகளின் ஒரு இதழ்கூட வெளிவரவில்லையே என்ற வருத்தம் எனக்கு இருந்தது. ஆயினும், பத்திரிகை அலுவலகம் ஒன்றில் தங்கிப்பயிற்சி பெற முடிந்ததே என்ற திருப்தி எனக்கு ஏற்பட்டது. மேலும், மனிதர் சிலரின் இயல்புகளை ஒரளவு தெரிந்து கொள்வதற்கான வாய்ப்பு கிட்டியதே எனும் மகிழ்ச்சியும் என்னுள் தோன்றியது. இனி கோயம்புத்துார் என்ற பெரிய நகரத்தில் என் வாழ்க்கை எப்படி அமையுமோ என்றொரு எண்ணமும் தலைகாட்டியது. கோவை வெரைட்டி ஹால் ரோடில் ஒரு சிறிய வீட்டிலிருந்து "சினிமா உலகம்” வெளிவந்து கொண்டிருந்தது. அதுவேதான் ஆசிரியர் பி.எஸ். செட்டியார் குடும்பத்துடன் வசித்த வீடாகவும் இருந்தது. அதில் தனியாக இருந்த ஒரு சிறு அறைதான் சினிமா உலகம் அலுவலகம். பலவகையான புத்தகங்கள், பழைய பத்திரிகைகளின் பைண்டு செய்யப்பெற்ற தொகுப்புகள் கொண்ட அலமாரிகள், மேஜை, நாற்காலிகள், டைப்ரைட்டிங் மிஷின் முதலியன நிறைந்த நெருக்கடியான இடம் அந்த அறை. அதுவே நான் தங்கும் இடமாகவும் ஆயிற்று. அருகில் இருந்த உடுப்பி ஓட்டல் ஒன்றில் எனது சாப்பாட்டுக்கும் சிற்றுண்டிக்கும் வேண்டிய ஏற்பாடுகள் செய்தார் செட்டியார். பக்கிரிசாமி செட்டியார் என்பது அவருடைய முழுப்பெயர். பத்திரிகை ஆரம்பிப்பதற்கு முன்பு அவர் சென்னையில் உயர்நிலைப்