பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 % நிலைபெற்ற நினைவுகள் பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார். அந்நாள்களில் தமிழாசிரியர்களைத் தமிழ்ப் பண்டிதர் என்று குறிப்பிடுவது வழக்கம், சினிமாப் படத்தயாரிப்பு ஒரு தொழிலாக வளர்ந்து வந்த காலம். சினிமாப் படம் தயாரிக்க வேண்டும் என்கிற ஆசையும் வசதியும் பெற்றிருந்தவர்கள் பம்பாய், கல்கத்தா என்று போய் படங்கள் பிடித்து வந்தார்கள். காலப்போக்கில் சென்னையிலேயே தேவையான வசதிகளும் வாய்ப்புகளும் ஏற்படலாயின. 'என் தமிழர் படமெடுக்கலானார்; எடுத்தார்கள் ஒன்று பத்து நூறாக என்று கவிஞர் பாரதிதாசன் பாடியது போல, திரைப்படத் தொழில் வேகம் பெற்று வளர்ந்து கொண்டிருந்தது தமிழ்நாட்டில். தமிழ்ப் பண்டிதர் பக்கிரிசாமி செட்டியாரையும் சினிமாத்துறை ஈர்த்தது. அவர் பள்ளிக்கூட வேலையைத் துறந்துவிட்டு, சினிமா உலகத்தில் புகுந்தார். தனது பெயரை நாகரிகமாக பண்டிட் பி.எஸ். செட்டியார் என்று மாற்றிக் கொண்டார். ராஜாதேசிங்கு, காளமேகம் போன்ற சில படங்களின் தயாரிப்பில் பொறுப்பேற்றுச் செயல் புரிந்தார். அந்நாளைய சினிமா வட்டாரத்தில் ஒரு முக்கியப் புள்ளியாகத் தெரிய வந்திருந்தார். ஏற்கனவே அவருக்குக் கல்யாணமாகி மனைவியும் மக்களும் இருந்தனர். இருப்பினும், காளமேகம் படத்தயாரிப்பு காலத்தில், அந்தப் படத்தில் துணை நடிகையாக நடித்துக் கொண்டிருந்த ஒரு பெண்னை துணை மனைவியாக ஏற்று, குடும்பத்தில் ஒருத்தி ஆக்கிக் கொண்டார். நான் போய்ச் சேர்ந்த காலத்தில் இரு மனைவியரும், முதல் மனைவியின் மூன்று பெண் குழந்தைகளும், செட்டியாருக்கு மருமகன் உறவுமுறையான இளைஞன் ஒருவனும், செட்டியாரோடு, அந்த வீட்டில் வசித்தார்கள். வளர்ந்து கொண்டிருந்த சினிமாத் தொழிலைச் சார்ந்து சினிமாப் பத்திரிகைகளும் தோன்றி வளர்ந்து கொண்டிருந்தன. வட இந்தியாவில் இந்திமொழிப் பத்திரிகைகளும், இங்கிலீஷ் பத்திரிகைகளும் வெளிவந்து கொண்டிருந்தன. இந்தியா முழுவதும் பெயர் பெற்ற சினிமா இதழாக பாபுராவ் பட்டேலின் பிலிம் இந்தியா எனும் ஆங்கிலப் பத்திரிகை விளங்கியது. அவருடைய வேகமும் விறுவிறுப்பும் நிறைந்த இங்கிலீஷ் நடையும், முரட்டுக் கிண்டலும், கேள்விகளுக்கு அவர் அளித்த தடாலடிப் பதில்களும்,