பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் , 71 குடும் சுவையும் கலந்த திரைப்பட விமர்சனங்களும் பாபுராவ் பட்டேலுக்கும், அவருடைய பிலிமிந்தியா' இதழுக்கும் பரபரப்பான கவனிப்பைப் பெற்றுத் தந்தன. பாபுராவ் பட்டேல் பாணியில் தமிழ்நாட்டிலும் சில ஆங்கில இதழ்கள் தோன்றின; ஒரு மாதிரியாக வளர்ந்து கொண்டிருந்தன. இவற்றை எல்லாம் பார்த்த சினிமா உலகப் பிரபலஸ்தர் பி.எஸ். செட்டியாருக்கும் தமிழில் சினிமாப் பத்திரிகை நடத்தலாமே என்ற ஒரு உந்துதல் ஏற்பட்டது. ஆகவே, "சினிமா உலகம் - "சினிமா ஒர்ல்ட் - என்ற மாதம் இருமுறை வெளிவரும் இதழை ஆரம்பித்து நடத்தலானார். வெகுகாலம் வரை இதழ்ப் பிரதியின் விலை அரையனாவாகத் தான் இருந்தது. சாதாரண நியூஸ் பிரின்ட் தாளில், ரோஸ் நிறக்காகித அட்டையுடன் "சினிமா உலகம் பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது. அட்டையிலும், உள்ளேயும் திரைப்படக் காட்சிகள், முக்கிய நடிகர்கள் படங்கள் அச்சிடப்படும். பிற்காலத்திய சினிமா சஞ்சிகைகளில் சகஜமாக இடம்பெற்ற மினுமினுப்பான அட்டை நடிகையரின் கவர்ச்சிப் படங்கள், நடிக நடிகையர் பேட்டி, அவர்களுடைய வாழ்க்கை வரலாறுகள் முதலிய எதுவுமே சினிமா உலகம்’ பத்திரிகையில் தலைகாட்டியதில்லை. 'தமிழின் முதல் சினிமாப் பத்திரிகை’ என்ற பெருமையான அறிவிப்பு இதழ்தோறும் எடுப்பாக இடம் பெற்றிருக்கும். ஸ்டுடியோச் செய்திகள், எங்கே என்ன படம் தயாராகிறது எனும் தகவல், தமிழ் இந்தி ஆங்கிலப் படங்கள் பற்றிய சுவாரசியமான செய்தித் துணுக்குகள், பட விமர்சனங்கள், வாசகர்களின் கேள்விகளுக்கான பதில்கள் முதலிய அம்சங்கள் காணப்படும். "சினிமா உலகம்’ இதழுக்குத் தனிச்சிறப்பு பெற்றுத் தந்த முக்கிய விஷயம், அந்தப் பத்திரிகைக்காக அவ்வப்போது உழைத்த துணை ஆசிரியர்களின் எழுத்தாற்றல் ஆகும். சினிமாத் துறையில் வாய்ப்புகளை நாடி வந்து, பி.எஸ். செட்டியாரின் உதவியைக் கோரியவர்கள் சினிமா உலகம்’ பத்திரிகையின் வளர்ச்சிக்காகத் தங்கள் உழைப்பை உதவியிருந்தார்கள். திரைப்பட வசனகர்த்தாவாகப் புகழ்பெற்ற இளங்கோவன் (ம.க. தணிகாசலம்) ஒரு சமயம் சினிமா உலகம்’ இதழுக்காக உழைத்திருந்தார். மகாகவி பாரதியாருக்குப் பின் வந்த கவிஞர்களில் தனித்தன்மை பெற்றிருந்தவர்களில் ஒருவரான சதுசு யோகியார்