பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 : நிலைபெற்ற நினைவுகள் (சது. சுப்ரமணிய யோகி, சிறிது காலம் அந்தப் பத்திரிகைக்குத் தனது எழுத்துக்கள் மூலம் சிறப்புச் சேர்த்திருந்தார். கவிஞர் பாரதிதாசனும் ஒரு காலகட்டத்தில் அந்தப் பத்திரிகைக்காக உழைத்துள்ளார். இவற்றால் எல்லாம் சினிமா உலகம் தனி மதிப்பும் ஒரு தரமும் பெற்று வளர்ந்திருந்தது. வெகுகாலம் சென்னையிலேயே வளர்ந்த والتي تنبيه யுத்தகால நெருக்கடி காரணமாக, கோயம்புத்துருக்கு மாற்றப்பட்டிருந்தது. அந்நாள்களில் கோவை, சென்னைக்கு அடுத்த முக்கிய சினிமாத் தயாரிப்புக் கேந்திரமாக விளங்கியது. பல ஸ்டுடியோக்களும் படத்தயாரிப்பு நிறுவனங்களும் அங்கு செயலாற்றிவந்தன. நான் அங்கு போய்ச் சேர்ந்த காலத்தில் கோவை நகரம் பரபரப்பு மிகுந்திராத, நெருக்கடிகள் சேர்ந்திராத, அமைதி நகரமாகத்தான் இருந்தது. வெரைட்டி ஹால் ரோடு அமைதியும் அழகும் நிலவிய பிரதேசமாக விளங்கியது. வீடுகள், கடைகள் நெருக்கமாய் மிகுதியாய் இருந்ததில்லை, நெடுகிலும், ஆர்.எஸ். புரம் என்கிற ரத்தின சபாபதிபுரமும் தனித்த பகுதி போல் அமைதிப் பிரதேசமாக இருந்தது. ஜனப்பெருக்கமும் போக்குவரத்து வாகனங்களின் நெரிசலும் இல்லாதிருந்த நாள்கள் அவை. யுத்தகால பீதிதான் அவ்வப்போது பரபரப்பு ஏற்படுத்தும். அனைத்து முக்கிய நகரங்களிலும், விமானத் தாக்குதலை எதிர்பார்த்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. ஏ.ஆர்.பி. வார்டன்கள் (ஏர் ரெய்ட் ப்ரிகாஷன்) எங்கும் எப்போதும் தென்படுவர். திடீரென்று அபாயச் சங்கு நெடுங்குரலில் அலறும். உடனே, ரோடுகளில் போகிற வாகனங்கள் பலவும் நின்றுவிட வேண்டும். நடந்து போகிறவர்கள் ஓரங்களுக்கு ஒதுங்கி எங்காவது பதுங்கி நிற்க வேண்டும். அரை மணி நேரத்துக்குப் பிறகு மீண்டும் சங்கு அலறும், அபாயம் நீங்கிவிட்டது என்று அறிவிப்பது போல. பழையபடி அனைத்து வாகனங்களும் இயங்கும்; ஜனங்கள் நடமாடத் துவங்குவர். அவசர அலுவலாக எங்கேயாவது போகிறவர்களுக்கு ஒத்திகை நாடகம் தொல்லையாகத்தான் தோன்றும். தேவையில்லாத எச்சரிக்கைப் பயிற்சி என்றுகூட அநேகர் எண்ணினர். யுத்தகாலத்தை நினைவூட்டும் விதத்தில் வெள்ளைக்கார ராணுவ வீரர்கள் நெடுகிலும் தென்பட்டுக் கொண்டிருந்தார்கள்.