பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் x 73 நடுரோட்டில் விறைப்பாக நடந்து போவார்கள். அடிக்கடி ஆங்கிலோ இந்தியப் பெண்களோடும், ராணுவத்தில் பெண்கள் பிரிவில் சேர்ந்திருந்த பெண்களோடும் (அவர்கள் ராணுவச் சீருடை அணிந்திருப்பார்கள்) உல்லாசமாகச் சுற்றித் திரிவதையும் கான முடிந்தது. அக்காலத்தில் கோயம்புத்துரைக் கலவரப்படுத்திக் கொண்டிருந்த மற்றொரு விஷயம் பிளேக் நோய். எலிகளால் இந்நோய் பரவுவதாகக் கண்டறிந்திருந்தார்கள். எலிகளின் உடலில் ஒருவகைக் கிருமிகள் புகுந்து வளரும். ஒரு கட்டத்தில் கிருமிகளால் தாக்குண்ட எலி கிறுகிறுவெனச் சுற்றி, தொப்பெனக் கீழே விழுந்து சுழலும், சாகும். அந்த எலியிலிருந்து பிளேக் கிருமிகள் வெளிப்பட்டு மனிதர்களைப் பற்றிக் கொள்ளும் முதலில் தேகத்தில் கட்டி தோன்றும் பிளேக் கட்டி என்று பெயர். அடுத்து வேகமாக ஜூரம் ஏற்படும். பலவித பாதிப்புகள் உண்டாகும். சிகிச்சைகள் பலனளியா, நோயால் பீடிக்கப்பட்டவர்கள் இறந்து போவார்கள். இதனால் பிளேக் என்றாலே மனிதர்கள் வெகுவாக அஞ்சினார்கள். ஒரு வீட்டில் உயரே இருந்து எலி சுழன்று விழுந்து தரையில் சுற்றி செத்துப் போவதைப் பார்த்த உடனேயே, அந்த வீட்டில் இருக்கும் அனைவரும் பயந்து அலறி வெளியே தெருவுக்கு வந்துவிடுவார்கள். சுகாதாரப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளும் பணியாளர்களும் உடனடியாக வந்து, வீடு நெடுகிலும் உரிய மருந்தைப் பாய்ச்சுவார்கள். அதற்கான கருவி மூலம் மருந்தைத் தெளித்து விட்டு (மருந்தடித்து) சன்னல்கள் கதவுகள் அனைத்தையும் சிக்கென அடைத்து சீல் வைத்து விடுவார்கள். அதன் பிறகு பலநாள்கள் வரை அந்த வீட்டில் மனிதர்கள் வசிக்கக் கூடாது. விஷயம் தெரிந்தவர்கள் அதன்பிறகு கூட அப்படிப்பட்ட வீடுகளில் வசிப்பதற்காகச் செல்ல மாட்டார்கள். இவ்வாறு அடைத்துக் கிடந்த வீடுகள் கோவையின் ஒவ்வொரு தெருவிலும் தென்பட்டன. வெரைட்டி ஹால் ரோடு - அந்த ரோடில் வெரைட்டி ஹால் என்ற பிரசித்தி பெற்ற சினிமாத் தியேட்டர் இருந்தது. அதனால் அதுக்கு அந்தப் பெயர்கூட அடிக்கடி பிளேக் அனுபவம் பெற்றது. சினிமா உலகம் அலுவலகம் இருந்த வீட்டுக்குச் சில வீடுகள் தள்ளியிருந்த ஒரு வீட்டில் ஒருநாள் எலி செத்து விழுந்தது. உடனே பீதியும் அலறலும் மனிதர் வெளியேற்றமும் வந்தது. உரிய அதிகாரிகள் வந்து மருந்து தெளித்து, புகை மூட்டம் போட்டு,