பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 & நிலைபெற்ற நினைவுகள் வீட்டை அடைத்துப் பூட்டி விட்டுப் போனார்கள். பிறகு நீண்ட காலம் அந்த வீடு பூட்டப்பட்டே கிடந்தது. கோவையிலும் சுற்று வட்டாரத்து ஊர்களிலும் அத்தாள்களில் பிளேக் நோய் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்தது. அரசு உரிய நடவடிக்கைகள் எடுத்து அந்த நோயை ஒழித்துக் கட்டியது. காலப் போக்கில் பிளேக் நோய் என்றால் என்ன என்பதே தெரியாமல் போயிற்று. பிளேக் நோய் பரவியிருந்த காலத்தில், இதர பல அசெள கரியங்களையும் மனிதர்கள் அனுபவிக்க வேண்டியிருந்தது. சான்றாக, வெளியூர்களுக்குப் பார்சல்கள் அனுப்ப வேண்டும் என்றால், ரயில் நிலையத்துக்குப் போய் உடனடியாக அவற்றை உரியவர்களிடம் சேர்ப்பித்து, ரசீது பெற்று வந்து விட முடியாது. பார்சல் அனுப்ப வேண்டிய பொதியை அல்லது மூட்டையை அல்லது பெட்டியை ஒரு மணி நேரம் வரை நல்ல வெயிலில் காயவைக்க வேண்டும். அவை நன்கு சூடேறப் பெற்றால், அவற்றில் கண்ணுக்குப் புலனாகாமல் இருக்கக்கூடிய கிருமிகள் செத்துப் போகும். கிருமி ஒழிப்புக்காகத் தான் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை, "சினிமா உலகம்’ பத்திரிகைக் கட்டுகளை வெளியூர் விற்பனையாளர்களுக்கு ரயில்வே பார்சல் மூலம் அனுப்புகிற போது, கட்டுகளை வெயிலில் காயப்போட்டு விட்டு - அரைமணிக்குப் பிறகு அவற்றைத் திருப்பி, மறுபுறம் வெயிலில் படும்படி வைக்க வேண்டும் காத்திருக்க வேண்டும். இவ்விதம் ஒரு மணி நேரம் காத்திருப்பது அலுப்பேற்படுத்துகிற வெட்டி வேலையாகத் தான் தோன்றும். - வீணாகக் காத்திருக்க வேண்டிய வெட்டி வேலை ஏ.ஆர்.பி. சங்கு ஊதப்படுகிறபோதும் கட்டாய நிகழ்வாகிவிடும். தபால் பீசுக்கோ, ரயில் நிலையத்துக்கோ, அல்லது வேறு எங்காவது அலுவலாகப் போகிறபோது, திடீரென்று அபாயச் சங்கு அலறினால், உடனடியாக ஒடி ரோடோரத்துக் கடைகள் பக்கமோ வீடுகளின் அருகிலோ பம்மி நிற்க வேண்டும். ஏ.ஆர்.பி. வார்டன்கள் விசில் ஊதிக் கொண்டு அங்குமிங்கும் அலைவார்கள். வேடிக்கையாக இருக்கும். வெரைட்டி ஹால் ரோடில் நடக்கிறபோது, சங்கு ஊதப்பட்டால், அங்கே இருந்த ஒரு டீ ஓட்டலில் புகுந்து கொள்ள வசதியாக இருக்கும். நாகரிகமான பெரிய டீக்கடை அது கூட்டம்