பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் & 75 இராது. அமைதியாக அமர்ந்து டீ குடித்தபடி எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் காத்திருக்கலாம். தெரு நிகழ்ச்சிகளை வேடிக்கை பார்க்கவும் முடியும். வெரைட்டி ஹால் ரோடில் குறிப்பிடத்தகுந்த இன்னொரு இடமும் இருந்தது. பிரியாணிக் கடை பிரியாணிக் கடையை பொதுவாக முஸ்லிம்கள் நடத்துவது வழக்கம். இந்தக் கடை பிராமணர் ஒருவரால் நடத்தப்பட்டு வந்தது. பிராமனாள் பிரியாணிக் கடை சுத்தமாக இருந்ததுடன் அங்கு பிரியாணியும் இதர உணவுப் பொருள்களும் ருசியாக இருந்தன என்று அனுபவஸ்தர்கள் புகழ்ந்து பேசினார்கள். அதனால் அந்தக் கடைக்கு நல்ல வியாபாரம். எப்பவும் கூட்டம் மொய்க்கும் இடமாக விளங்கியது அது. ‘பிராமணன் பிரியாணிக் கடை நடத்துகிறானே! ஆச்சர்யமாக இருக்குதே! என்று சிலர் சொல்வது உண்டு. இதிலென்ன அதிசயம்! இந்தக் காலத்தில் பிராமணர்கள் நடத்தும் செருப்புக் கடை கூட இருக்கிறது என்று விஷயம் தெரிந்தவர்கள் விளக்கம் கூறுவதும் உண்டு. கோவையில் 'கொங்குநாடு’ என்றொரு பத்திரிகை சிறு அளவில் நடந்து கொண்டிருந்தது. செய்திப் பத்திரிகை. வேறு சில இதழ்களும் வெளிவந்தன. கவனிப்புப் பெறாதவை அவை புதிதாக 'பேசும் படம்’ என்ற சினிமா இதழ், ராம்நாத் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. பெரிய சைஸ் பத்திரிகை வழவழப்பான அட்டை வசீகரமான நடிகையின் படம் அட்டையில். இதர பல கவர்ச்சி அம்சங்களும் கொண்டு வியாபார வெற்றியாக வளர்ந்து கொண்டிருந்தது. சேலத்திலும் சென்னையிலும் சினிமாவுக்கென்று வேறு சில இதழ்கள் தோன்றியிருந்தன. சாதாரணத் தோற்றம் கொண்டவைதான். சினிமாத் துறையினரின் ஆதரவு பெற்று, வளர்வதற்காகப் போட்டி போட்டுக் கொண்டிருந்தன. இருப்பினும் சினிமா உலகம்’ இதழுக்குத் தனி மதிப்பு இருந்தது. இந்தச் சமயத்தில் அதன் விலை இரண்டனா ஆகியிருந்தது. ஸ்டுடியோச் செய்திகள், திரைப்படத் தகவல்கள், பட விமர்சனம், கேள்வி பதில் முதலிய அம்சங்கள் போக, கதை கட்டுரை கவிதைகளும் அதில் இடம் பெறுவது வழக்கம். படிப்பதற்கு சுவாரசியமான விஷயங்கள் அதில் அதிகமிருந்தன.